இன்று யெடியூரப்பா மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப் போகிறார்.
ஏற்கனவே ஒரு முறை முதல்வராக பதவியேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பாக ராஜினாமா செய்து விட்டுப் போனவர் இப்போது மீண்டும் முதல்வராக பதவியேற்றுக் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவுள்ளார்.
இம்முறையாவது அவர் தலை தப்புமா?
எந்த நம்பிக்கையில் அவர் முதல்வரானார்?
ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் எம்.எல்.ஏ க்களை விலைக்கு வாங்கி குமாரசாமி மந்திரி சபையை கவிழ்த்த தைரியமா?
அதே ஆயிரக்கணக்கான கோடிகள் மூலமாக பெரும்பான்மை பெற்று விட முடியும் என்ற நம்பிக்கையா?
காங்கிரஸ்- ஜனதா தள் - இந்த இரண்டு கட்சிகளில் இப்போது உள்ளவர்களை நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு விலைக்கு வாங்க முடியும் என்ற நம்பிக்கையா?
நோ, நோ, நோ
எல்லாம் பெயரின் ஸ்பெல்லிங்கை மாற்றியுள்ள நம்பிக்கைதான்.
ஆமாம்.
Yeddyurappa
என்ற பெயரை
Yediyurappa
என்று மாற்றிக் கொண்டு விட்டார்.
வாழ்க்கையையே பிழையாகக் கொண்டுள்ள ஒரு மனிதனுக்கு எழுத்துப் பிழையெல்லாம் ஒரு விஷயமா என்ன?
பார்ப்போம். இதுவாவது அவருக்கு கை கொடுக்கிறதா என்று!
மேட்டருக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லியே?
ReplyDelete"பயணம்" படக்காட்சி அது. பொருத்தமானதுதான். நாளை இணைப்பு தருகிறேன்
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete