Monday, July 1, 2019

பு.மா ஜெமோ - சுத்தியலையே போட்டிருக்கலாம்



மேலே உள்ள கார்ட்டூன் ஓவியர் தோழர் ரவி பாலேட் வரைந்தது. 

ஆ! இது சரியா? ஒரு எழுத்தாளன் தாக்கப்படும் போது வருந்தாமல் நக்கலடிக்கலாமா என்றெல்லாம்  பல விதமான பின்னூட்டங்களும் வந்திருந்தது.

சாதாரண வாய்த்தகராறுதான். போலீஸ் கேசை ஸ்ட்ராங் ஆக்கவே மருத்துவமனையில் அனுமதி என்பதை படிக்கும் போதே ஜெமோ மீது அனுதாபப்பட ஏதுமில்லை என்பது தெளிவாகி விட்டது. 

அந்த சம்பவத்திற்குப் பிறகு ஜெமோ இரண்டு பதிவுகள் எழுதி உள்ளார். 

மனுசன் கொஞ்சமாவது மாறியுள்ளாரா என்று பார்த்தால் பிறவித் திமிர் அப்படியே உள்ளது.

எழுத்தாளனை மதிக்கத் தெரியாத ஜென்மங்கள் என்பது தொடங்கி அவர் வாழும் பகுதியில் உள்ள அத்தனை பேரையுமே குடிகாரர்களாக முத்திரை குத்திவிட்டார். இவரைப் போன்ற உத்தமர்கள் வாழ்வதற்கு லாயக்கற்ற பகுதியாம் அது!

இன்னொரு பதிவிலோ காமெடி என்ற பெயரில் எரிச்சலை வர வைக்கிறார். தமிழில் எழுதி தஞ்சாவூர்ப் பெண்ணை திருமணம் செய்து கொண்டதால்தான் வசைகள் வாங்கி தவடையில் அடி வாங்கினாராம்.

ஊரில் உள்ள அத்தனை பேரையும் எள்ளி நகையாடி தான் மட்டுமே எழுத்தாளன் என்ற திமிரில் அலைவதுதான் அவர் மீது  விமர்சனங்கள் (வசை அல்ல)  குவிவதற்கு காரணம் என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத இவரெல்லாம் என்ன ஒரு எழுத்தாளர்!

தஞ்சை பிரகாஷ், அசோக மித்திரன், இன்குலாப், சுஜாதா, சமீபத்தில் கிரீஷ் கர்னார்ட் ஆகியோர் இறந்து போனதற்குப் பிறகு இவர் எழுதியதைப் படித்த யாருக்கும் எந்த நாளும் இவர் மீது அனுதாபமே வராது.

அந்த இரண்டாவது பதிவைப் படிக்கும் போதுதான் படத்தில் இவர் மீது புளிச்ச மாவு பாக்கெட்டை போட்டதற்குப் பதிலாக நேசமணி மீது விழுந்த சுத்தியலையே போட்டிருக்கலாம் என்று தோன்றியது. 

பிகு : எழுதி சில நாட்களாகி ட்ராப்ட்லியே இருந்தது. புதிதாக எழுதும் மன நிலை இல்லாததால் இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. ஜெய மோகன் தலையில் சுத்தியல் விழுந்திருக்கணும்July 2, 2019 at 11:56 AM

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. செத்து சுண்ணாம்பாகிய புராண புளுகுகளை மூட்டை மூட்டையாய் எழுதி அதை படித்தால் எதோ கிரீடம் வந்தது போல் திரியும் கூட்டம் புளிச்ச மாவு புகழ் ஜெமோக்காக பெரிதாக போராட்டம் நடத்தாதது அவலம்.

    ReplyDelete