தினமலர்
பற்றிய ஒரு பழைய பதிவில் “டெஸ்க் வொர்க்னா என்னங்க?” என்று பிக் பாஸ் கஞ்சா கருப்பு
பாணியில் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார்.
டெஸ்க்
வொர்க் பற்றி சுருக்கமாக விளக்குவோம்.
ஒரு
நிருபரின் பணி என்பது அடிப்படையில் களம் சார்ந்தது. ஒரு போராட்டமோ அல்லது கலவரமோ அல்லது
விபத்தோ அல்லது விழாவோ நடக்கிறது என்றால் அங்கே நேரடியாக சென்று செய்திகளை சேகரித்து
அளிப்பது. அச்சு ஊடகம், காட்சி ஊடகம் இரண்டிற்கும் இது பொருந்தும்.
பெரும்பாலான
நிருபர்கள் களத்திற்கு செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் அங்கேயும் சொகுசுப்
பேர்வழிகள் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்கள் நேரடியாக களத்திற்குச் செல்லாமல் தன்
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ அமர்ந்த படி களத்திற்குச் சென்ற தன் சக நிருபர்களிடம்
செய்தியைக் கேட்டு தனது சொந்த கற்பனைச் சரக்கையும் சேர்த்து தன் நிறுவனத்திடம் செய்தியாக
அளித்து விடுவார்கள். இதுதான் டெஸ்க் வொர்க்.
இப்போதெல்லாம்
நிருபர்களுக்குள் ஒரு ப்ரொபஷனல் எதிக்ஸ் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரு பத்திரிக்கை
புகைப்படக்காரர் தான் எடுத்த புகைப்படத்தை தன் நண்பரான இன்னொரு பத்திரிக்கை நிருபருக்கு
அனுப்பி வைப்பார்.
இதனால்
செய்தி எப்படி வரும் என்று ஒரு சின்ன உதாரணம் தருகிறேன்.
ஐந்தாண்டுகளுக்கு
முன்பாக இன்சூரன்ஸ்துறை கருத்தரங்கம் என்று ஏற்பாடு செய்திருந்தோம். அப்போதைய அரூர்
தொகுதி எம்.எல்.ஏ தோழர் பி.டெல்லிபாபு உரையாற்றுவதாக இருந்தார். ஆனால் அன்று அவரால்
வர முடியாத நிலையில் எங்களின் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் உரையாற்றினார்.
அன்று
அந்த நிகழ்ச்சிக்கு இரண்டு நிருபர்கள் மட்டுமே வந்திருந்தார்கள். அதிலே ஒரு நாளிதழில்
மட்டும் செய்தி வந்திருந்தது. நிருபர் வராத ஒரு நாளிதழில் கூட செய்தி வந்தது. அந்த
செய்தியோ மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ டெல்லிபாபு பேசினார் என்று சொன்னது.
இது
போல பல நிகழ்ச்சிகளில் நோட்டீஸில் பெயர் போட்ட அத்தனை பேரும் பேசியதாக செய்தி வரும்.
ஆனால் அதிலே பாதி பேர் கூட அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள். இதெல்லாம் அழைப்பிதழைப்
பார்த்து தயாரிக்கிற செய்திதான். இதெல்லாம்தான் டெஸ்க் வொர்க்.
மகாமகம்
பற்றி குமுதம் வெளியிட்ட செய்தி பற்றி முன்பு எழுதியிருந்தேன். அதன் இணைப்பு இங்கே
உள்ளது. டெஸ்க் வொர்க்கிற்கான கிளாசிக்கல் உதாரணம் இது.
சில
வருடங்களுக்கு முன்பு பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் இறந்து போன போது நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
வெளியிட்ட செய்தியின் விபரங்கள் எல்லாம் இப்போதைய பாடகர் ஸ்ரீனிவாஸ் பற்றியது. கூகிளைத்
தேடி தயாரித்த செய்தியின் லட்சணம் அது.
சமீபத்தில்
கூட டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஒரு சொதப்பல் செய்தியைப் பார்த்தேன். கும்பகோணம் சட்டமன்ற
உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பற்றி ஒரு செய்தி வெளியிட்டது. அவரது புகைப்படம் கீழே
உள்ளது.
ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட புகைப்படத்தைப் பாருங்கள்.
எம்.எல்.ஏ
அன்பழகனுக்கும் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனுக்கும் வித்தியாசம் தெரியவில்லை.
சுருக்கமாக
டெஸ்க்
வொர்க் என்பது யாதெனில்
களத்திற்குச்
செல்லாமல் கண்டபடி செய்தி எழுதுவது.
No comments:
Post a Comment