Monday, July 15, 2019

திஸ் இஸ் "தின மலர்" டெஸ்க் வொர்க்



சந்திராயன் 2 விண் கலம் இன்று விண்ணில் செலுத்தப் பட்டிருக்க வேண்டும். 54 நிமிடங்களுக்கு முன்பாக ஒரு தொழில் நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு அந்தப் பணி ஒத்தி வைக்கப்பட்டது.

ஆனால் தின மலர் பத்திரிக்கை மட்டும் விண்ணில் செலுத்தப் பட்டதாக இன்றைய நாளிதழில் செய்தியே வெளியிட்டு விட்டது. 

களத்திற்குச் செல்லாமல் மேஜையில் அமர்ந்த படி மனதில் தோன்றியதை எல்லாம் செய்திகளாக வெளியிடுவதைத்தான் டெஸ்க் வொர்க் என்று சொல்வார்கள்.

மிக முக்கியமானதொரு செய்தியே டெஸ்க் வொர்க்காக இருந்தால்  . . .

இதிலிருந்தே அந்த பத்திரிக்கையின் தரத்தை புரிந்து கொள்ளலாம்.

மகாமகம் தொடர்பாக இப்படித்தான் குமுதமும் ஒரு கட்டுரை வெளியிட்டது நினைவுக்கு வருகிறது. 

இனியாவது இவர்கள் எல்லாம் தங்கள் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து செய்தி சேகரிக்கட்டும். 


2 comments:

  1. தினமலரில் பல்வேறு பதிப்புகள் வருகின்றன
    ஒரு பதிப்பில் ஏவபட்டது என்று உள்ளது
    இன்னொரு பதிப்பில் இடை நிறுத்தப்பட்டது என்று உள்ளது

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete