Wednesday, July 24, 2019

மோடி, ட்ரம்ப் - யார் பொய்யர்?


ஜி -20 உச்சி மாநாட்டின் சமயத்தில் தன்னோடு பேசிய மோடி, காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம் சொல்லி உள்ளார். அப்படி மத்தியஸ்தம் செய்ய தான் தயாராகவே இருப்பதாகவும் சொல்லியுள்ளார்.

மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதிப்பதில்லை என்ற இந்திய நாட்டின் நிலைப்பாட்டை மோடி கைகழுவி விட்டாரா என்று நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்கட்சிகள் கேட்ட போது

"மோடி அப்படியெல்லாம் ட்ரம்பிடம் மத்தியஸ்தம் செய்யச் சொல்லி கேட்கவில்லை"

என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார்.

மோடி - ட்ரம்ப்

இந்த இருவரில் பொய் சொல்வது யார்?

மோடி அவ்வாறு பேசவில்லை என்று மழுப்பலாக சொல்லும் ஜெய்சங்கர் ட்ரம்ப் சொல்வது பொய்யா என்ற கேள்விக்கு  ஏன் பதில் சொல்லவில்லை?

மோடியா? ட்ரம்பா? யார் பொய்யர்?
அல்லது இருவருமேவா?
ஏனென்றால் இருவருமே மோசடிப் பேர்வழிகள்...

உண்மை வெளிவராமல் அப்படியே அமுங்கப் போகும் சர்ச்சைகளில் இதுவும் ஒன்றாகப் போகப் போகிறது.

அதற்குக் காரணம்
இருவருமே சர்ச்சையை திசை திருப்பக் கூடிய 
மோசடிப் பேர்வழிகள் என்பதுதான்.

3 comments:

  1. மோடியாதான் இருக்கும்... சந்தோசமா .....கம்யூனிஸ்ட்காரங்க இப்படித்தான் நாட்டை விட ....

    ReplyDelete
    Replies
    1. நாட்டை விட மோடியை முக்கியமாக கருதுகிற சங்கிகளால்தான் நாடு நாசமாகப் போய்விட்டது

      Delete
  2. it must be Modi.

    ReplyDelete