Saturday, July 6, 2019

இப்போ ஃபாரீன் புரோக்கர்ஸ் . . .


நிர்மலா அம்மையார் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டைப் பற்றி விரிவாக பார்க்கும் முன்பாக முதலில் ஒரு டீஸர்.

இன்சூரன்ஸ் துறையில் செயல்படும் புரோக்கர் கம்பெனிகளில் நூறு சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இன்சூரன்ஸ் துறையில் தனியார் நுழைவதற்கு முன்பாக புரோக்கர் கம்பெனிகள் என்ற அமைப்பே கிடையாது. இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கும்  பாலிசிதாரர்களுக்கும் நேரடித் தொடர்புதான் உண்டே தவிர சேவைகளை செய்வதற்கு புரோக்கர் கம்பெனிகள் கிடையாது.

தனியார் கம்பெனிகள் இன்சூரன்ஸ் துறையில் நுழைந்த போது புரோக்கர் கம்பெனிகளும் சேர்ந்தே வந்தார்கள்.

எப்படி தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் அன்னியக் கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளின் கூட்டாளியாகத்தான் இருக்க முடியுமோ, அது போலத்தான் புரோக்கர் கம்பெனிகளிலும் அவர்கள் 49 % மூலதனம் மட்டுமே வைத்திருக்க முடிந்த இளைய பங்காளிகளாகத்தான் இருப்பார்கள்.

அதை இப்போது நூறு சதவிகித அன்னிய மூலதனமாக மாற்றி விட்டார்.

இது இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் நூறு சதவிகித அன்னிய மூலதனத்தை கொண்டு வருவதற்கான முதல் நடவடிக்கையே.

அன்னிய இன்சூரன்ஸ் கம்பெனிகள் நூறு சதவிகித மூலதனத்தோடு கடை திறந்தால் என்ன ஆகும்?

அவர்கள் மக்களிடமிருந்து திரட்டுகிற பிரிமிய வருமானம் முழுதும் அவர்களது நாட்டிற்கே சென்று விடும். இந்திய மக்களின் சேமிப்பு இந்தியாவில் சுற்றுவதற்குப் பதிலாக வேறு நாட்டு பொருளாதாரத்திற்குப் பயன்படும்.

அதைப் பற்றி நமக்கென்ன கவலை!

ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்ற கற்பனை செய்து கனவில் காலத்தை கழித்திடலாம் . . .

புற நானூறு பாடலைச் சொல்லி தமிழுக்கு பெருமை சேர்த்து விட்டார் என்று ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கலாம்


3 comments:

  1. அந்த இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகளிலும் இந்திய மக்கள்தானே இன்வெஸ்ட் பண்ணப் போறாங்க. அதற்கு என்ன காரணமாயிருக்கும், ஏன் இந்திய இன்ஷ்யூரன்ஸ் கம்பெனில முதலீடு செய்யலை என்று யோசித்து நம் நாட்டு இன்ஷ்யூரன்ஸ் கம்பெனிகள் தக்க நடவடிக்கை எடுத்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. ADHA SENJAAL
      PALA PER
      SEAT KILINJURUM SIR...

      Delete
    2. உங்க சீட்டை ஜாக்கிரதையா பாத்துக்குங்க

      Delete