ஏதோ ஒரு
வடிவத்தில்
அமைந்திருந்த
அந்த வெடிகுண்டு
நொடியில்
வெடித்தது.
அழிவும் கூட
அக்கணமே.
இன்னும்
கொஞ்சம் அழிவிற்கான
அடித்தளம்
அமைக்க
உருவமே
இல்லாமல்
இன்னும் பல
குண்டுகள்
காற்றில்
பரவுது
வடிவமே இல்லாத
வதந்திகளாக.
பக்கத்து
வீட்டுக்காரனை
பகைவனாக
சித்தரித்து
எதிரே
பார்ப்பவரையெல்லாம்
எதிரிகளாக
எண்ண வைத்து
எக்கணமும்
அழிவை
நிகழ்த்திக்
கொண்டே
இருக்கிறது
வெடிப்பதே
தெரியாத
வடிவமே இல்லாத
வதந்திக்
குண்டுகள்,
நேற்றும்
இன்றும்
இனி நாளையும்
கூட
அணுகுண்டினை விட ஆபத்தான்து வதந்தி
ReplyDelete