மக்களவைத்
தேர்தல்களில் போட்டியிட்ட சில திரை நட்சத்திரங்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிலர்
தோற்றுப் போயுள்ளனர்.
சினிமா
ஸ்டண்ட் போல பல்டி அடித்து கட்சிகளுக்கிடையே தாவிக் கொண்டிருந்த விஜயசாந்தி
தோற்றுப் போய் விட்டார்.
ராமாயண சீதை
ஸ்மிர்தி இராணியை விட ராகுல் காந்தி பரவாயில்லை என்று அமேதி மக்கள் முடிவு செய்து
விட்டனர்.
முன்னாள்
இந்திய அழகி குல் பனாக்கிற்கு பஞ்சாப் மக்கள் ஆதரவு தரவில்லை.
ஒரு
கட்டத்தில் ராகுல் காந்தி பின்னிலையில் இருந்த போது நக்மா முன்னிலை
பெற்றிருந்தார். மீரட்டில் நக்மாவை பார்க்க திரண்ட கூட்டம் வாக்காக மாறவில்லை.
இடைத்தேர்தலில்
பிரம்மாண்ட வெற்றி பெற்ற குத்து ரம்யா எனப்படுகிற திவ்யா இம்முறை கர்னாடகாவில் அதே
தொகுதியில் தோற்றுப் போய் விட்டார்.
இரண்டு மூன்று
கட்சி மாறிய ஜெய்ப்பிரதாவும் தோற்றுப் போய்விட்டார்.
எனக்கு
மதுராவோடு உணர்வுரீதியான பந்தம் இருக்கிறது என்று சொன்ன ஹேமா மாலினிக்கு மதுரா
தொகுதி மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். தொகுதிக்கு வந்து அந்த
பந்தத்தை தக்க வைத்துக் கொள்வாரா என்பது போக போகத் தெரியும்.
கடந்த முறை
தெலுங்கு தேசக்கட்சி வேட்பாளராக உள்குத்து வேலைகளால் தோற்றுப் போன ரோஜா, இந்த முறை
வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளராக அதே நகரி தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராகி
விட்டார்.
நான் மிகவும்
வருத்தமடைகிற வெற்றி முன்னாள் நடிகை மூன் மூன் சென் பங்குரா தொகுதியில்
தேர்ந்தெடுக்கப்பட்டதுதான். தலை சிறந்த நாடாளுமன்றவாதியான தோழர் பாசுதேவ்
ஆச்சார்யா கிட்டத்தட்ட ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுள்ளார்.
அவரது
நாடாளுமன்ற அனுபவம், விஷய ஞானம், பேச்சாற்றல், பிரச்சினைகள் பற்றிய தெளிவான
புரிதல் ஆகியவை இல்லாமல் போவது பதினாறாவது மக்களவைக்குத்தான் மிகப் பெரிய இழப்பு.
மம்தாவின் மோசடி வேலைகளாலும் தேர்தல் ஆணையத்தின் கையாலாகாததனத்தாலும் ஒரு மிகச்
சிறந்த உறுப்பினரை இந்திய மக்களவை இழந்துள்ளது.
பின் குறிப்பு - இதில் ஒரு நடிகையின் பெயரை நான் தெரிந்தே தவிர்த்துள்ளேன்
yes mr.raman
ReplyDeleteit is our very unfortunate indian democracy
one time Vijayanthimala bali won and seasoned parlimentarian era.cheziyan lost