Sunday, May 11, 2014

கூட இருந்தே குழி பறிக்கும் உத்தம வில்லன்கள்

மோடியின் பொதுக்கூட்டத்திற்கு வாரணாசி தொகுதி தேர்தல் அலுவலர்
அனுமதி மறுத்தார். அது சரியான முடிவு என்று தேர்தல் ஆணையம்
ஒரு மனதாக கூறியது. இரு தினங்களுக்குப் பிறகு அந்த முடிவில் 
முரண்பட்டார் தேர்தல் ஆணையரில் ஒருவரான பிரம்மா. வாரணாசி
அதிகாரியின் முடிவு சரியானது என்று தேர்தல் ஆணையம் ஒருமனதாக
முடிவெடுத்தது. பிரம்மா இப்போது ஏன் இப்படி பேசுகிறார் என்று
தெரியவில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் விரக்தியோடு
சொல்கிறார்.

இப்படி தலையின் காலை வாருகிற இணைகளை இந்திய வரலாறு
முழுதும் நாம் அங்கங்கே பார்க்க முடியும்.

அவசர நிலைக் காலம் முழுதும் இந்திரா காந்தியோடு இருந்து விட்டு
1977 ல் தேர்தல் அறிவித்தவுடன் ஜனநாயக காங்கிரஸ் ஆரம்பித்த
ஜகஜீவன் ராம்,

1977 சட்டப்பேரவை தேர்தல் வரை கலைஞரோடு இருந்து விட்டு
தேர்தல் நெருக்கத்தில் எம்.ஜி.ஆரிடம் ஒட்டிக் கொண்டார்
நாவலர் நெடுஞ்செழியன்.

1980 நாடாளுமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி,மு.க தோற்றதும் அதுவரை
நம்பர் டூ வாக இருந்து பிறகு திமுக விற்கு தாவிய நாஞ்சில் மனோகரன்.

மொரார்ஜி தேசாயின் துணைப் பிரதமராக இருந்து அவரது ஆட்சியை
கவிழ்த்த சரண்சிங்

வி.பி.சிங்கின் துணைப் பிரதமராக இருந்து பிறகு அவரது ஆட்சியை
கவிழ்த்த தேவிலால்,

நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபோது பொருளாளராக,
பிறகு செயல் தலைவராக அவரால் நியமிக்கப்பட்டு அவரின் 
காலை வாரிய சீத்தாராம் கேசரி.

என்று பலரை சொல்ல முடியும்.

முடிவுகள் எடுக்கும் போது துணை நின்று விட்டு பிறகு சிக்கல் வந்தால்
அதிலிருந்து தங்களை மட்டும் விடுவித்துக் கொள்ள நினைக்கும்
சந்தர்ப்பவாதம் இது. கோழைகளின் யுக்தி என்றும் சொல்லலாம்.

தாங்கள் மிகவும் நல்லவர்கள் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும்
என்பதற்காக செய்கிற காலை வாரும் செயல் அவர்களை துரோகிகளாக
மட்டுமே காண்பிக்கும் என்பதை பாவம் அவர்கள் உணர்வதே இல்லை.

2 comments: