ஆனந்த விகடனில் விகடன் மேடையில் எஸ்.பி,பி அளித்த
பதில்களில் நெஞ்சைத் தொட்ட ஒரு பதில் மெல்லிசை மன்னர்
எம்.எஸ்.விஸ்வநாதன் வடித்த கண்ணீர் பற்றியது.
நிழல் நிஜமாகிறது படத்தில் வரும் "இலக்கணம் மாறுதோ "
படத்தின் ஒலிப்பதிவு முடிந்ததும் அதன் பாதிப்பு விலகாமல்
எம்.எஸ்.வி கண்ணீர் வடித்ததாக அவரது மனைவி தொலைபேசி
செய்து கூறியதாகவும் அதுநாள் வரை பாலசுப்ரமணியன் அவர்களே
என்று அழைத்த எம்.எஸ்.வி பாலு கண்ணா என்று அழைத்ததாகவும்
எஸ்.பி.பி. கூறி நெகிழ்ந்து போயிருப்பார்.
அதற்குக் காரணமான இந்த பாடலை பார்க்க ஒவ்வொரு
நாளும் நினைத்தாலும் இன்றுதான் அவகாசம் கிடைத்தது.
எவ்வளவு சிறப்பான பாடல் இது.....
கண்ணதாசன் வரிகளுக்கு மெல்லிசை மன்னர் அற்புதமான
இசை வடிவம் அளிக்க எஸ்.பி.பி யும் வாணி ஜெயராமும்
தங்கள் தேனிசைக் குரல்களால் உயிர் கொடுத்திருப்பார்கள்.
திரையில் அதை கமலஹாசனும் சுமித்ராவும் செய்திருப்பார்கள்.
பாலச்சந்தரின் மறக்க முடியாத படத்தின் மறக்க முடியாத பாடல்.
நீங்களும் இங்கே பார்த்து, கேட்டு ரசியுங்கள்
அற்புதமான பாடல். இதே படத்தில் உள்ள கம்பன் ஏமாந்தான் பாடலும் ரம்மியமான உணர்வை கொடுப்பது.எம் எஸ் வி யின் இசை மேதமைக்கு பெருமை சேர்க்கும் பாடல்களின் பட்டியலில் இவை இரண்டும் கண்டிப்பாக உண்டு.
ReplyDeletedear raman
ReplyDeleteboth Kamban emandan and illakanam marudho are good songs. both were written by kannadasan. just for remembrance am sharing some thoughts
if my memory is correct, this movie released during 1978 march. at that time Ilayaraja's graph starting upward and MSV was in downward trend.
after two years kannadasan was no more and slowly MSV field was over.