Thursday, May 22, 2014

இறந்தும் வாழும் விழிகள் மூலமாய்



 
உழைப்பால் உயர்ந்த
உன்னதத் தலைவர்.
கல்வியைத் துறந்து
கட்சிக்கு வந்தவர்.
அவர் வாழ்க்கையே
இன்று பாடமானது.

கடிதங்களை சேர்க்கும்
பணியையும் செய்தார்.
களத்தின் தளபதியாய்
முன்னணியிலும் நின்றார்.

கொடுஞ்சிறைவாசம் பல வருடம்.
தலைமறைவாய் பல வருடம்.
மக்களவையிலும் பல வருடம்.
சட்டப் பேரவையிலும் பல வருடம்.

மக்கள் பணியே மூச்சாக இருந்ததால்,
சிறைவாசத்தால் கலங்கியதுமில்லை,
மக்களவையால் மயங்கியதுமில்லை.

கொங்கணிதான் தாய் மொழி என்றாலும்
உங்கள் தமிழிற்கு உண்டோ ஈடு இணை ?

காதல் மணம் புரிந்தீர்,
இணை பிரிந்த சோகத்தை
அடை காத்த
அன்றில் பறவையாய்
அவர்களிடமே சென்றீர்களோ
சிறகு விரித்து?

இருள் கவிழ்ந்த தேசத்தின்
இன்னும் ஒரு சோகமாய்
உங்கள் மறைவு.

நீங்கள் உயர்த்திய செங்கொடியை
நாங்கள் என்றும் தாழ விடோம்.

இயக்கத்தின் கனவாம்
பொன்னுலகம்,
மக்களுக்கான மாற்று உலகம்
நாளை நிச்சயம் உதயமாகும்.
நீங்கள் மறைந்தாலும்
உங்கள் கொடையால்
வாழும் உங்கள் விழிகள்
பார்த்து மகிழும்
நாளும் வரும்.

செவ்வணக்கம் தோழரே.

2 comments:

  1. GREAT LEADER. I DREW A LOT OF INSPIRATION FROM COM.RU. RED SALUTE TO HIS MEMORY.

    ReplyDelete