Sunday, May 18, 2014

ஆரம்பிச்சுட்டாங்க அடாவடி ஆட்டத்தை

கர்னாடக மாநிலம் தட்சிண கன்னடா தொகுதியில் பாஜக வெற்றி
பெற்றதைக் கொண்டாட சென்ற வெற்றி ஊர்வலத்தின் ஒரு
பகுதியாக சுருள்படி என்ற இடத்தில் உள்ள மசூதியருகே
வெடி வெடித்து அந்த மசூதியின் மீது கல்லெறிந்து தாக்குதல்
நடத்தி கண்ணாடிகள், மேடைகள் ஆகியவற்றை பாஜக
தொ(கு)ண்டர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த
ஒரு மௌல்வியையும் அறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.

அதே பகுதியில் இன்னொரு மசூதிக்குள் புகுந்தும் தாக்குதல்
நடத்தியுள்ளனர். 

முதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

மோடி பதவியேற்கும் முன்பே அடாவடியை துவக்கி விட்டார்கள்.

இனி போக, போக ?????????????

மேலும் விபரங்களுக்கு இந்த இணைப்பை  பார்க்கவும்

2 comments:

  1. சுடு தண்ணீரில் 10 ரூபாய், ஜில் தண்ணீரில் 50 ரூபாய்
    பொதுவாக டீக்கடைகளில் லெமன் டீ என்று கேட்டால்
    சுடுதண்ணீரில் கொஞ்சம் டீ டிகாஷனைப் போட்டு
    எலுமிச்சம் பழம் பிழிந்து கொடுப்பார்கள்.
    அதன் விலை அதிகபட்சம் பத்து ரூபாய்தான். மிஞ்சிப் போனால்
    பனிரெண்டு ரூபாய்தான் வேலூரில் வாங்குவார்கள்.
    அதே வேலூரில் நேற்று முன் தினம் புதிதாக திறக்கப்பட்ட
    திரையரங்கில் சினிமா பார்க்க போனபோது இடைவேளை
    நேரத்தில் ஐஸ் டீ என்று அறிவிப்புப் பலகையில் மின்னிக்
    கொண்டிருந்தது.

    சுடு தண்ணீருக்குப் பதிலாக ஜில் தண்ணீர். அதை மிஷின்
    செய்து கொடுத்து ஐம்பது ரூபாய் வாங்கிப் போட்டுக் கொண்டே
    இருந்தது.

    கொடுக்க நாம் தயாராக இருந்தால் பிடுங்கிக் கொள்ள
    காத்திருக்கிறார்கள்.

    அன்று நான் ஐம்பது ரூபாய் கொடுப்பதை விட வீட்டிலிருந்து
    எடுத்துப் போன பாட்டிலில் இருந்த தண்ணீரை சாப்பிடுவது
    மேல் என்று முடிவெடுத்து விட்டேன்.

    இந்த பக்கத்தை அப்படியே பிரதி எடுத்து உங்கள் மேல் உன்மையாக அன்பு கொன்டுள்ள தோழர்களிடம் காட்டுங்கள். அவர்கள் சொல்வார்கள் தோல்விக்கான காரணத்தை அவர்கள் சொல்வார்கள்.

    ReplyDelete
  2. சத்தியமா புரியல தோழர்

    ReplyDelete