வேறு
வழியில்லாமல் நேற்று இரண்டாம் ஆட்டம் திரைப்படம் பார்க்க வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டது. ஒரு தோழரை இரண்டு மணிக்கு ரயிலேற்ற வேண்டியிருந்தது. ரெண்டுங்கட்டான்
நேரத்தில் புறப்படுவதை விட திரைப்படத்திற்கு
போய் விட்டு ஸ்டேஷனுக்கு போவது சரியாக இருக்கும் என்று நினைத்து காட்பாடியிலேயே
இருந்த திரையரங்கிற்கு போனோம்.
புதிதாக வந்த
படம், கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நினைத்து முன்பதிவு செய்து விட்டு சரியாக
பத்து மணிக்கு போனால் நான்கு வரிசைகளில் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள்
இருந்தார்கள். மற்றபடி காலி இருக்கைகள்தான். அதற்கு எதற்கு ஏ.சி என்று அரை மணி
நேரத்திலேயே அணைத்து விட்டார்கள்.
சரி
திரைப்படத்திற்கு வருவோம்.
சிரிக்க வைத்த
காமெடிப் படமா இல்லை மொக்கையா என்றால் காமெடியும் மொக்கையும் சேர்ந்து செய்த கலவை
என்றுதான் சொல்ல வேண்டும்.
கொலை வெறியோடு
இருக்கும் பரம்பரைப் பகையாளி வீட்டிற்குள் சிக்கிக் கொள்ளும் சந்தானம் உயிர்
பிழைத்தாரா என்பதுதான் கதை.
வீட்டிற்குள்
இருக்கும் வரை விருந்தாளியாக மரியாதையாக நடத்துவார்களாம், வெளியே வந்த அடுத்த
வினாடியே வெட்டிக் கொல்வார்களாம். காதில் பூ சுற்றுகிற இந்த லாஜிக் இல்லாத
அம்சத்தை வைத்து படம் எடுத்துள்ளார்கள்.
சந்தானத்தின்
காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கிறது, சில இடங்களில் நோக வைக்கிறது. ஒரு
ட்ரெயின் காட்சியில் ராஜகுமாரனும் சந்தானமும் மாறி மாறி கலாய்க்கிறார்கள் என்ற
பெயரில் நம்மை கலாய்த்து விடுகிறார்கள்.
டாடா சுமோவை
மிஞ்சுகிற வேகத்தில் சந்தானம் சைக்கிளில் விரைந்து காமெடி செய்கிறார். அந்த
சைக்கிள் வேறு டி.ஆர் மாதிரி பேசி எரிச்சலூட்டுகிறது. வில்லன்களோடு வீரமாய் சண்டை
போடாமல் அடிவாங்குவது ஆறுதல். ஆமாம் கிளைமாக்சில் வருகிற மரப்பாலம் நிஜமாகவே
இருக்கிறதா? இருந்தால் போய் பார்த்து விட்டு வரலாம்.
ஹீரோ என்பதால்
ஓபனிங் சாங், அதிலே பெண்கள் மலர் தூவுவது போன்றவையெல்லாம் அவசியமா சந்தானம்?
மீண்டும் ஹீரோவாக நடித்தால் இதையெல்லாம் விட்டு விடுங்களேன்.
THIS MOVIE IS A REMAKE OF TELUGU MOVIE. SO NO LOGIC. JUST A TIME PASS. THAT'S ALL
ReplyDeleteயதார்த்தத்தை மிஞ்சிய படமாகத் தெரிகிறது
ReplyDeleteசார்,
ReplyDeleteஇது மரியாதா ராமண்ணா என்ற தெலுங்கு படத்தோட ரீமேக். யு ஒன்லி ஸியிங், நோ திங்கிங்.
remake of the hindi film 'singh is king' i think
ReplyDelete