இரண்டு
நாட்கள் மட்டும் வேலூர் மீது கருணை பொழிந்த மழைக்கு மீண்டும் என்ன கோபமோ
தெரியவில்லை. சூரியனின் உக்கிரம் தாங்க முடியவில்லை.
வேலூர் பழைய
பேருந்து நிலையத்திற்கு அருகில் வெப்ப அளவை காண்பிப்பதற்கான ஒரு கருவியை வைத்துள்ளார்கள்.
இன்று மதியம் ஒரு விழாவில் பங்கேற்க அவ்வழியாக செல்லும் போது பார்த்தால் அப்போதைய
வெப்ப அளவு 107
டிகிரி பாரன்ஹீட் என்று காண்பித்தது. ஏசி காருக்குள்ளேயே அனல்
அடித்தது, வியர்த்துக் கொட்டியது. இது ஒரு மணிக்கு.
அந்த
விழாவிற்கு கால் மணி நேரத்திற்கு பின்னால் வந்தவர்கள் சொன்னார்கள் 109 டிகிரி என்று. ஒன்றே
முக்கால் மணிக்கு திரும்பும் போது பார்த்தால் 111 டிகிரியாக வெப்பம்
மாறியிருந்தது.
எத்தனை டிகிரி
என்று தெரியாவிட்டால் கூட சமாளிக்க முடியும் போல.
இப்போதே
இப்படியென்றால் இனி வரும் நாட்களில்???????
மழையே, மழையே
உடனே வா
இல்லையென்றால்
வேலூர் மக்கள் கருகிப் போய்விடுவார்கள்
No comments:
Post a Comment