Monday, May 5, 2014

கத்திரிக்காய் சாதம் – மனைவி சொன்ன வழி



நீ லஞ்ச் செய்து கொடுத்து ரொம்ப நாளாச்சு, அதனால இதுவரைக்கும் செய்யாத ஏதாவது ஒன்று ட்ரை செய் என்று மகன் சொல்ல “வாங்கி பாத்” என்று அழைக்கப்படுகிற கத்திரிக்காய் சாதம் முயற்சி செய்தேன்.

பொதுவாக நான் பார்த்த சமையல் குறிப்புக்கள் எல்லாமே சாதம் தனியாக வடித்து அதோடு கத்திரிக்காய் மசாலா கலவையை சேர்ப்பது போலதான் இருந்தது. நான் முயற்சி செய்தது என் மனைவி சமைக்கும் முறை. ஆகவே இது எனது கண்டுபிடிப்பு அல்ல. உங்கள் பாராட்டுக்கள் அவர்களுக்குத்தான் செல்ல வேண்டும்.

கடலைப் பருப்பு, மல்லி, மிளகாய் வற்றல், கொஞ்சம் கசகசா, கிராம்பு  போன்ற பொருட்களோடு தேங்காய் துறுவல் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை தண்ணீர் விட்டு மிக்ஸியில் அறைத்து வைத்துக் கொள்ளவும்.







பிறகு குக்கரில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு அது வெடித்த பின்பு சீரகம் சேர்த்து வறுக்கவும். பின்பு நீட்டமாக வெட்டிய வெங்காய, தக்காளி, கத்திரிக்காய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். பிறகு அதில் அறைத்து வைத்த மசாலாவை தண்ணீர் விட்டு சேர்க்கவும். பிறகு உப்பு போட்டு அரிசியையும் போட்டு குக்கரை மூடவும். 




இரண்டு விசில் வந்ததும் இறக்கி வைத்து கொத்தமல்லி, முந்திரி பருப்பு போட்டு கிளறி பறிமாறவும். 





 

செய்து பார்த்து எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

4 comments:

  1. சமையலிலும் கலக்குகிறீர்களே

    ReplyDelete
  2. அருமை. தோழர் கலக்கிட்டார்.

    ReplyDelete
  3. நன்றி திரு ஜெயக்குமார்

    ReplyDelete
  4. நன்றி திரு வேகநரி

    ReplyDelete