ஜல்லிக்கட்டை
தடை செய்த உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் மாடுகளின் அடிப்படை உரிமைகளை
பாதுகாக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது பாராட்டுக்குரியது.
இந்திய
அரசியல் சாசனத்தில் மாடுகளின் அடிப்படை உரிமைகள் என்ன என்று வரையறுக்கப்பட்டுள்ளதா
என்பதை வழக்கறிஞர்கள் யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
ஒவ்வொரு
குடிமகனுக்கும் அரசியல் சாசனம் பல உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ளது.
கருத்துரிமை,
பேச்சுரிமை,
சொத்துரிமை,
வாழ்வுரிமை
வேலை
செய்வதற்கான உரிமை
எந்த ஒரு
மதத்தையும் சார்வதற்கோ அல்லது சாராமல் இருப்பதற்கான உரிமை,
வழிபாட்டு
உரிமை
என்று பல
அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனம் உறுதி செய்கிறது. இதைத்தவிர தொழிலாளர்
நலச்சட்டம் போன்ற சட்டங்கள் பல உரிமைகளை அளிக்கிறது.
அரசின்
கொள்கையின் விளைவாக உருவான கடன் தொல்லை தாள முடியாமல் வாழ்வை முடித்துக் கொண்ட
விவசாயிகளின் வாழ்வுரிமை பற்றி நீதிமன்றங்கள் கவலைப்பட்டுள்ளதா?
இருக்கும்
வேலைவாய்ப்புக்களை பறிக்கும் வகையில் அமைந்துள்ள கொள்கைகளால் இளைஞர்களின் வேலை
செய்வதற்கான உரிமை முடங்கிப் போவது பற்றி ஏதாவது தீர்ப்பு வந்ததுண்டா?
சிறுபான்மை
மதத்தவர் மீது காவிக்கும்பல் நடத்தும் விஷப் பிரச்சாரத்தில் மதத்தை சாரும் உரிமை
தாக்கப்படுகிறதே என்று தீர்ப்புக்கள் திரும்பிப் பார்த்ததுண்டா?
தொழிலாளர்
நலச்சட்டங்களை மதிக்க மாட்டோம் என்ற முரட்டுப் பிடிவாதத்தோடு செயல்படும்
பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஆதரவாகவே பல தீர்ப்புக்கள் வந்துள்ளதே?
இஸ்லாமியர்கள்
வழிபாடு நடத்திக் கொண்டிருந்த பாபர் மசூதியில் கள்ளத்தனமாக சிலை அமைத்து அங்கே
அவர்கள் வழிபட முடியாமல் தடுத்தவர்களுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு வழிபாட்டு
உரிமைக்கு எதிரானது அல்லவா?
மாடுகளின்
அடிப்படை உரிமைகளுக்காக கவலைப் படுகிற உச்ச நீதி மன்றம் கொஞ்சம் மனிதர்களின்
அடிப்படை உரிமைகள் பற்றியும் கவலைப்பட்டால் நல்லது.
Commie idiot
ReplyDeleteநாயே, நீ புத்திசாலி என்றால் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு, பெயரைச் சொல்ல துப்பில்லாத உனக்கெல்லாம் கமெண்ட் போட மட்டும் எப்படிடா தைரியம் வருது? ஓடிப் போ
ReplyDeletemental
ReplyDeleteThanks for informing your name Mr Anonymous. So Mr Mental, you don't have answers for the questions raised in my write up
ReplyDeleteஉண்மைதான்.....மாடுகளை ஜல்லிக்கட்டிலிருந்து மட்டும் காப்பாற்றினால் போதுமா....தமிழகத்திலிருந்தும் தமிழகம் வழியாகவும் தினந்தோறும் NP லாரிகளில் அள்ளி குவிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கேரளாவிற்கு கொண்டுச் செல்லப்படுகிறதே....மாடுகள்...அவற்றை காப்பாற்ற என்ன செய்யப்போகிறது...இந்த உச்சநீதிமன்றம்....you tubeல் பாருங்கள்...கேரளாவில் மாடுகள் எவ்வளவு கொடுமையாக கொல்லப்பட்டு கறிதுண்டுகளாக்கப்படுகிறது என்று.....மிகவும் கொடுமை...
ReplyDelete