Sunday, May 11, 2014

திருட்டை விசாரித்தால் அக்காவுக்கு ஏன் கோபம்?

வங்க மொழியில் "பரிபர்த்தன்" என்று சொல்லப்பட்ட மாற்றத்தை
உருவாக்க மம்தாதீதி அறைகூவல் கொடுத்தார். அவர் ஏதோ இடது
முன்னணி ஆட்சி செய்யாததையெல்லாம் செய்து விடுவார் என்று
நம்பி மக்கள் கொஞ்சம் பேர் ஆதரவு கொடுத்தார்கள். அக்மார்க் புரட்சிகர கம்யூனிஸ்ட் என்று தங்களைக் கருதிக்கொண்டு இருக்கிறவர்கள் தேர்தல் பாதை திருடர் பாதை என்று  இங்கே  வலைதளத்திலும் முகநூலில் மட்டும் வீரம் பேசிக் கொண்டிருக்கிற  நேரத்தில் அங்கே மாவோயிஸ்ட்
என்று தங்களை அழைத்துக் கொண்டு மாவோவை களங்கப் படுத்தும்
பேர்வழிகள், கூலிப்படைகளாக துப்பாக்கி காட்டி வேறு வாக்காளர்களை
மிரட்டினார்கள்.

அப்படி ஆட்சிக்கு வந்தாலும் மம்தா மக்களுக்காக எதுவும் கிழித்து
விடவில்லை என்பதும் ரௌடி ராஜ்யம் நடந்து கொண்டிருக்கிறது,
பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதும் இன்றைய யதார்த்தம்.

இந்த லட்சணத்தில் சாரதா சிட்பண்ட்ஸ் என்ற நிறுவனம் 
கோடிக்கணக்கில் மக்களின் பணத்தை சுருட்டியிருக்கிறது. அதன்
நிர்வாகிகளுக்கும் மம்தா கட்சியினருக்கும் உள்ள தொடர்பு
அன்றாடம் அம்பலமாகிக் கொண்டே இருக்கிறது.

மம்தா வரைந்த ஓவியங்களை சாரதா சிட்பண்ட்ஸ் முதலாளி
கோடிக்கணக்கில் விலை கொடுத்து வாங்கியுள்ளார். உலகின்
தலை சிறந்த ஓவியர்களின் அழியா புகழ் உடைய ஓவியங்கள்
கூட இந்த கத்துகுட்டி ஓவியரின் ஓவியங்கள் போல விலை
போனது கிடையாது.

லஞ்சமாக பணம் கொடுக்க எப்படி ஒரு திருட்டு வழி பாருங்கள்.

இத்தனை மோசடிகள் இருப்பதால்தான் சாரதா சிட்பண்ட்ஸ்
விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கும் என்றால் தீதிக்கு கோபம்
பொங்கி வருகிறது.

 

2 comments:

  1. YOU ARE CROSSING THE LAXMAN (MAMTHA) REKA.......

    SESHAN

    ReplyDelete
  2. Luckily i am in Tamilnadu. If i am West Bengal, Didi would have put me behind bars

    ReplyDelete