தேர்தல்
ஆணையம் மோடியின்பால் ஏன் பரிவோடு இருக்கிறது என்பது தெரியவில்லை. சட்டத்தின்
கரங்கள் அவரை நெருங்க மட்டும் ஏன் அஞ்சுகிறது?
வேட்பு
மனுவில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை அளிக்காமல் விட்டாலோ அல்லது தவறாக அளித்தாலோ
அந்த நபர் போட்டியிட அருகதையற்றவர் என்று சொல்கிறது உச்சநீதி மன்ற தீர்ப்பு.
இதுவரை போட்டியிட்ட தேர்தல்களில் தன்னுடைய மனைவி பற்றிய விபரங்களை மறைத்ததற்கு
தேர்தல் ஆணையம் ஏன் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? மௌனத்தின் மர்மம்
என்ன?
வாக்குச்சாவடிக்கு
வெளியே தனது தேர்தல் சின்னத்தோடு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தது இரண்டாண்டுகள்
சிறைத் தண்டனைக்குரிய தவறு என்று சட்டம் சொல்கிறது. அப்படிப்பட்ட தவறைச் செய்த
மோடியின் மீது தேர்தல் ஆணையம் எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது? இன்னும்
ஐந்தாண்டுகளுக்குப் பின்பா?
இதோ நேற்று
கூட ராமர் படம் பின்னணியில் இருக்க மோடி கூட்டத்தில் பேசியுள்ளார். உலகம் முழுதும்
பார்த்த இந்த காட்சி தேர்தல் ஆணையத்தின் கண்களுக்கு மட்டும் தெரியவில்லையா?
அவர்கள் வகுத்த சட்டத்தின்படி இதுவும் சட்ட விரோத செயல்தான். ஆனால் ஆணையத்தின்
மௌனம் தொடர்வது ஏனோ?
தொழிற்சங்கங்கள்
மேதின பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தும் போது எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது
என ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கும் தேர்தல் ஆணையம் மோடியின் அடாவடிகளை மட்டும்
தொடர்ந்து அனுமதிப்பது எவ்விதத்திலும் சரியில்லை.
இனியும் கால
தாமதம் இன்றி மோடியை தகுதி நீக்கம் செய்தால் மட்டுமே அது நியாயமாக செயல்படுவதாக
சொல்ல முடியும்.
சட்டத்தினை
தொடர்ந்து மீறும் அராஜகப் பேர்வழி பிரதமராகும் தகுதி படைத்தவரா என்று
மனசாட்சியுள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்
அட விடுங்க சார்...மே 16 வரைக்கும் வெயிட் பண்ணுங்க...
ReplyDeleteAre you that much innocent or still believe this system...? Modi KILLED 6000 people in 2002 Gujarat riots. He did fake encounter and KILLED the people. Everyone knows this, including the GREAT ALMIGHTY "Supreme Court of India". Even his then Police officials were given confessions. What happened? Nothing could be moved against him even for the severe KILLING charges. Modi is basically a fascist and was being designed & groomed to serve for corporate companies like Ambanis, Adhani, Tata, Birla & MNC / Corporate giants. That is why they are pampering / supporting him. Presently they are badly in need of a Fascist in power. They strongly believe that Namo is the person who can execute their exploiting PLANS by crushing Indian citizen & working class. As everybody knows, in India the Governments, its Officials, Election commission, Political parties (including Singpur Nano fame CPM& CPI), Judiciary system, main stream Medias, etc. all are in the control of the above Corporate. In this scenario, can we expect any justice from this existing system?? When PEOPLE get real power in people democracy then it is possible. Let us all work for the new revolution, thru which people will take Power from the hands of corporates and punish all the Fascist....
ReplyDeleteBanumani