தமிழகத்தில்
போட்டியிட்ட இரண்டு கல்வி வள்ளல்கள் தோற்றுப் போயிருக்கிறார்கள். பாரதீய ஜனதா
கூட்டணியில் எம்.ஜி.ஆர், பாரத் பல்கலைக் கழகங்களின் முதலாளி ஏ.சி.சண்முகம் வேலூர்
தொகுதியிலும் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழக முதலாளி பாரி வேந்தர் என்றழைக்கப்படுகிற
பச்சமுத்து பெரம்பலூர் தொகுதியிலும் தோற்றுப் போயுள்ளனர்.
பெற்றோரிடமிருந்து
பறித்த பணத்தை கோடி கோடியாக கொட்டி அவர்கள் தேர்தலை சந்தித்தனர். வெற்றி பெற்றால்
அதைப் போல பல மடங்கு கொள்ளையடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் செலவழிக்கப்பட்ட
பணம் அது.
பொதுவாக
அதிமுக இருநூறு ரூபாய் கொடுத்தது என்றால் வேலூரில் ஏ.சி.எஸ் கொடுத்தது முந்நூறு
ரூபாய். அவர்கள் சேர்த்து வைத்துள்ள பணத்தை ஒப்பிட்டால் இது ஜூஜூபி என்றாலும் கூட
இதை உடனடியாக ஈடு கட்டவே விரும்புவார்கள். அதற்குத்தான் இளிச்சவாய் பெற்றோர்கள்
இருக்கவே இருக்கிறார்களே! கூடுதல் கட்டணம், கூடுதல் கேபிடேஷன் கட்டணம் என்று
வசூலித்து விடுவார்கள். இப்போது பயிலும் மாணவர்களுக்கான கட்டணம் உயர்ந்தால் கூட
ஆச்சர்யப்படுவதிற்கில்லை
இந்த வருடம்
இப்பல்கலைக் கழகங்களில் சேரும், ஏற்கனவே பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின்
நிலைமையை நினைத்தால் கவலையாகவே உள்ளது. ஏ.சி.சண்முகம் மற்றும் பச்ச முத்து வின்
தோல்விக்கு விலை கொடுக்கப் போகின்றவர்கள் அவர்கள்தான். பாவம்.....
இன்னொரு கல்வி
வள்ளலான அதிமுகவின் தம்பிதுரை கரூரில் வெற்றி பெற்று விட்டதால் அவரது கல்லூரி
மாணவர்களுக்கு பிரச்சினையில்லை என்றும் கருத முடியாது. தேர்தல் செலவு
நிகழ்ந்துள்ளதே!
எனக்கு
தெரிந்த கல்வி வியாபாரிகள் இவர்கள்தான். வேறு யாராவது போட்டியிட்டு வெற்றி
பெற்றிருந்தாலோ இல்லை தோற்றிருந்தாலோ சொல்லுங்களேன்.
What about Jagatratchagan?
ReplyDeletedeposit poche..
ReplyDeleteஅனானி,
ReplyDeleteஉனக்கு தமிழ் தெரியாதா? இதுதான் பதில்
மண்ணில் பெருகிவரும்
மாபெரிய கொடுமைகளை
கோடையிடி தாக்குதலை
கூக்குரலின் ஆர்ப்பரிப்பை
கண்டு மனமொடிந்து
மனமிடிந்து
என்றேனும் ஒரு நாள் - நான்
இறந்து போவேனென்று
எவரேனும் எதிர்பார்த்தால்
அவர்கள்
ஏமாந்து போவார்கள்!
நான்...................
மண்ணில் வேரோடி
மாநிலத்தில் கால்பதித்து
வீசும் புயற் காற்றை
விழும் வரைக்கும்
நின்றெதிர்ப்பேன் !
நின்றெதிர்த்த முடிவினில் - நான்
நிலத்தில் வீழ்ந்து விட்டால்
என் கன்றெதிர்க்கும் !
கன்றுடைய கன்றெதிர்க்கும்!!
ஆமாம் தோழர் சங்கர், இன்னொரு கல்வி வியாபாரி ஜகத்ரட்சகன் பெயர் விடுபட்டுவிட்டது
ReplyDeleteWe wanted to become like USA in every aspect and now,
ReplyDeleteOur PM has been elected in the form of US elections. "Modi wave" is something created by an american advertisement comapany. In US, corporate masters funds the elections and in this aspect we have gone far better than US.
Who can save us from the upcoming 5 years??
- Thanks,
Ram
Due to this big loss to nation, Educational reformation may delay in higher education level....what do you think sir...
ReplyDeleteSeshan
Really it is sad that all politicians are playing with the future of the youngsters.
ReplyDeletepatchamuthu,shanmugam,jagathratchagan etc., are having lot of money in their pocket and they are throwing like anything. It is all our money only.
who is here to save this country. here the beauty is jagathratchagan also playing in Aasthiga vedam in the form of "21st century alwar"