Thursday, May 22, 2014

வைகோ - மோடியை விட சிறந்த நடிகர்

சில தினங்கள் முன்பாக மோடி பெற்ற சிறந்த நடிகர் விருது 
இப்போது வைகோ வசம் வந்துள்ளது.

பெரியார், அண்ணாவின் விரல் பிடித்து அரசியல் கற்றுக் 
கொண்ட வைகோவிற்கு பாஜகவின் அரசியல் கோர முகம்
தெரியாதா என்ன? ராஜ பக்சே வருகைக்கு எதிராக சாஞ்சி
வரை போராட்டம் நடத்தியவர்தானே அவர்? அப்போது
ராஜபக்சேவை அழைத்து என்ன பாரக் ஒபாமாவா இல்லை
விளாடிமிர் புடினா? பாஜக தானே?

பாஜக ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழருக்காக, 
தமிழக மீனவர்களுக்காக துரும்பைக் கூட கிள்ளிப் 
போடாது என்பது வைகோவிற்கு மற்ற எல்லோரையும் விட
நன்றாகவே தெரியும். ஆனாலும் வேறு எங்கும் செல்ல 
முடியாது, தனியாக நிற்கும் தைரியமும் கிடையாது.
அதனால்தான் முற்றிலும் முரண்பாடான கூட்டணி
என்று தெரிந்தும் பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டார்.

ஆனாலும் மோடி வந்தால் இலங்கைப் பிரச்சினை தலைகீழாய்
மாறி விடும் என்று பிரச்சாரம் செய்தார். ஏதோ நாளையே
ராஜபக்சேவை மோடி கைது செய்து விடுவார் என்ற பிம்பத்தை
உருவாக்க முனைந்தார். 

ராஜபக்சே வருவதை கண்டிக்காவிட்டாலோ, இல்லையில்லை
கண்ணீர் விட்டு மன்றாடாமல், கருப்புத்துண்டு அணிந்து
பதவியேற்பு விழாவிற்கு போய் விட்டால் இனி இலங்கைத்
தமிழரை வைத்து அவரால் அரசியல் தொழில் நடத்த முடியாது.

மேலும் மோடியோடு இணைந்ததால் அவரால் வெற்றியும் பெற
முடியவில்லை. ஆகவே கழண்டு கொள்ளவும் வாய்ப்பு வேண்டும்.

ஆக கண்ணீர் மல்க மல்க கை கூப்பி தனது நடிப்புத் திறமையை
வெளிப்படுத்தி விட்டார்.

பார்ப்போம் அடுத்த காட்சியை எப்படி அரங்கேற்றுகிறார் என்று....

20 comments:

  1. ம்ம்! பாவம் வைகோ!

    ReplyDelete
  2. அடுத்த காட்சி
    ‘ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அம்மா ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக அமைதியா இருக்கேன். இல்லன்னா… டெல்லிக்கு வர ராஜபக்சேவை களமாடி கந்தல் பண்ணிடுவேன்.’
    Copy paste comment.

    ReplyDelete
  3. http://mathimaran.wordpress.com/2014/05/22/rajapaksas-816/

    ReplyDelete
  4. போடா லூசு

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  8. நாய்க்கு பிறந்த நாய் மகனே

    ReplyDelete
  9. dear mr.raman
    atleast vaiko went to delhi and expressed his concern over this issue with modi and rajnath singh
    what your people are doing
    your comunists are against for tamil eazham.
    on srilankan issue they never shown any interest except thozar c.mahendran from chennai.
    mudinthal indha issuevil vaikovai support seyyungal
    allathu pesaamal vaiyai pothi kondu pongal

    ReplyDelete
  10. நல்லக்கண்ணு, தா.பாண்டியன் ஜெ வீட்டு வாசலில் நின்னு கண்ணீரும் கம்பலையுமா சூப்பர் ஆக்ட் கொடுக்கிறாங்களாமே.

    ReplyDelete
  11. வைகோவின் தம்பிமார்களின் யாரோ ஒருவர் இங்கே வந்து வாந்தி எடுத்து விட்டுப் போயிருக்கிறார். அவற்றில் பெரும்பாலான பின்னூட்டங்களை நீக்கியிருக்கிறேன். மிச்சமிருப்பதே அவரின் கண்ணியத்திற்கு சாட்சி. பதில் சொல்ல வக்கில்லாத நிலைக்கு அக்கட்சி போய் விட்டது என்பதற்கு இது சான்று. வைகோவின் மீதுள்ள பாசத்தில் அந்த நண்பர் உணர்ச்சிவசப்பட்டுள்ளார் தான் ஏமாற்றப்படுவது தெரியாமல்.

    ReplyDelete
  12. திரு கணபதி கிருஷ்ணன், வைகோவின் நாடகத்தை உண்மையென நம்பும் உங்களைப் பார்த்து நான் அனுதாபப்படுகிறேன், இலங்கைத் தமிழர்களை வைத்து கம்யூனிஸ்டுகள் வியாபாரம் செய்வதில்லை

    ReplyDelete
    Replies
    1. Mr Raman,
      You belong to a party where Hindu Ram is vomiting. You will support Palestine state but never support a Tamil state even your borthers/sisters are being brutally killed, giving us advices to go with Rajapakse who is much worse than Modi.
      Vaiko atleast truly understands and supports our pain.

      Sathees

      Delete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. மன்னிக்கவும் மர்மயோகி, உங்கள் பின்னூட்டமும் சரியல்ல. நீக்கி விட்டேன்

    ReplyDelete
  15. ok Mr.Raman,
    as per your statement vaigo is the best actor than sivaji ganesan.
    whatever he is doing only for his fame only not for any other purpose
    whether are you agree for Mr.Rajapakshe visit to india now
    even thozar cpi tha pandian himself made a statement Modi to reconsider the invitation to Mr.Modi
    why you are trying to bring vaigo in this issue

    ReplyDelete
  16. dear mr.raman
    I am neither member of MDMK nor anbuthambi of vaigo
    my concern is only atleast vaigo is taking initiative in this issue.
    rest of other leaders are just keeping mum

    ReplyDelete
  17. திரு கணபதி கிருஷ்ணன், நான் உங்களை மதிமுகக் காரர் என்று சொல்லவேயில்லையே. நான் நீக்கிய, நீக்காமல் விட்டுள்ள ஒரு அனானியின் பின்னூட்டங்களை பாருங்கள். நான் பதிவின் துவக்கத்தில் சொல்லியுள்ளதைத்தான் மீண்டும் சொல்கிறென். மோடி இது போல செய்வார் என்று எதிர்பார்க்காத அவ்வளவு அப்பாவி வைகோ என்று நான் கருதவில்லை. இப்போதும் இப்பிரச்சினைக்காக கூட்டணியிலிருந்து வெளியே வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். நாடகம் புரியும்

    ReplyDelete