Monday, May 19, 2014

என்.டி டி.வி செய்த குளறுபடி



தேர்தல் முடிவுகளை அறிவித்துக் கொண்டிருந்த போது என்.டி. டி.வி யிலும் சரி, அதன் இணைய தளத்திலும் சரி ஒரு குளறுபடி நடந்து கொண்டிருந்தது.

திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளான திரிபுரா மேற்கு மற்றும் திரிபுரா கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் என்.டி டிவி யோ திரிபுரா மேற்கு தொகுதியில் மற்றவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள், வெற்றி பெற்றார்கள் என்றே சொல்லிக் கொண்டிருந்தது.

அதே போல் அதன் இணைய தளத்தில் சி.பி.ஐ(எம்.எல்) வேட்பாளர் பார்த்தா காம்கார் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தது. மற்ற இணைய தளங்களோ திரிபுராவின் இரண்டு தொகுதிகளிலும் சிபிஎம் மிகப் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும் மேற்கு வங்க தோல்வி காரணமாக இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைய முடியவில்லை என்ற ரீதியில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன.

கடைசியில் மறு நாள்தான் என்.டி. டி.வி யின் இணைய தளம் சரியான முடிவை வெளியிட்டது. நான்கு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர்   சங்கர் பிரசாத் தத்தா வெற்றி பெற்றதாக அறிவித்திருந்தது.

இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் அவர்கள் முன்னர் வெற்றி பெற்றதாக அறிவித்திருந்த சி.பி.ஐ(எம்.எல்) வேட்பாளர் பார்த்தா காம்கார் பெற்றிருந்தது என்னவோ 4,400 வாக்குகள் மட்டுமே.

இந்த குளறுபடிக்கு என்ன காரணமோ?


6 comments:

  1. திட்டமிட்டு செய்யபட்ட் முதாலாளித்துவ மோசடி

    ReplyDelete
  2. திட்டமிட்ட இடதுசாரி விரோத போக்கு

    ReplyDelete
  3. S.Raman,VelloreMay 12, 2014 at 7:39 AM
    Luckily i am in Tamilnadu. If i am West Bengal, Didi would have put me behind bars இப்படி உ(..)ரைப்பதை விட்டு அடுத்து செய்ய வேண்டியதை பற்றி சிந்தித்தால் காம்ரேடுகளை தவிர எந்த ------ ம் ஆளமட்டுமல்ல..,, ------------ முடியாது. ஆனால் நிலைமை என்ன?.. மாற்று மாற்று என பேசும் காம்கள்.. தங்கள் சிந்தனைய மற்றவர்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்பதை தாண்டி யோசிக்க மறந்ததன் விளைவே இன்றைய நிலை.

    ReplyDelete
  4. உங்களின் ஆலோசனைக்கு செயல் வடிவம் கண்டிப்பாக கிடைக்கும் தோழரே. தோல்வி நிச்சயம் துவள வைக்காது

    ReplyDelete
  5. இத்தனைக்கும் CPI -M கட்ச்சித் தலைவர் பிரகாஷ் கராத் மனைவி பிருந்தா கராத்தும் என்டிடிவி முதலாளி பிரணாய் ராய் மனைவி ராதிகா ராயும் சகோதரிகள்!

    ReplyDelete
  6. இத்தனைக்கும் CPI -M கட்ச்சித் தலைவர் பிரகாஷ் கராத் மனைவி பிருந்தா கராத்தும் என்டிடிவி முதலாளி பிரணாய் ராய் மனைவி ராதிகா ராயும் சகோதரிகள்!

    ReplyDelete