ஆட்சிக்கு வந்த போது சிக்ஸர், சிக்ஸர் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது சிக்ஸர்களை காணவில்லை. விக்கெட்டுக்கள்தான் விழுந்து கொண்டிருக்கிறது.
வேங்கை வயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகளைக் கலந்த
அயோக்கியர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. அந்த மேல்நிலை குடிநீர் தொட்டி
தகர்க்கப்பட்டதா என்பது கூட தெரியவில்லை.
பாதிக்கப் பட்டவர்களையே குற்றவாளியாக்கும் முயற்சிதான் நடக்கிறது.
அரசு தீவிரம் காண்பித்திருந்தால் வேங்கைவயல் குற்றவாளிகள் இந்நேரம் பிடிபட்டிருப்பார்கள். ஆனால் மாநில அரசு
அலட்சியம் காண்பிக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
வேங்கைவயல் பிரச்சினை முடியும் முன்னே மேல்பாதி திரௌஅதியம்மன் கோயில் பிரச்சினை வந்து விட்டது
தலித் மக்கள் அங்கே அனுமதிக்கப்படக்கூடாது என்று
ஆதிக்கசாதியினர் அடாவடி செய்கின்றனர். துவக்கத்தில் என்னமோ அரசு உறுதியாகத்தான்
இருக்கிறது போன்ற தோற்ற மயக்கத்தை அமைச்சர் பொன்முடியின் பேச்சு அளித்தது.
ஆனால் இப்போது என்ன நடந்துள்ளது?
பேச்சுவார்த்தையில் தீர்வு வராத காரணத்தால் கோயிலை சீல் வைத்து மூடி விட்டார்கள்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு வராவ்விட்டால் கோயில் நுழைவை
தடுக்கும் ஆதிக்க ஜாதியினர் மீது
நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்து வீட்டிற்கும் கோர்ட்டிற்கும் அலைய
விட்டிருக்க வேண்டுமே தவிர கோயிலை சீல் வைப்பதல்ல
தீர்வு.
தீண்டாமை பிரச்சினைகளில் அரசு தனது பலவீனத்தை இரண்டாவது
முறையாக வெளிப்படுத்தியுள்ளது.
இந்த சறுக்கல் சரியல்ல முதல்வரே, உடனடியாக இரண்டு
பிரச்சினைகளிலும் தலையிட்டு தீர்வு காணுங்கள்.
commis voted for EWS reservation and have no right to talk about dmk government. Temple is not a problem even we can close all the temples or converted into schools and colleges. Unemployment is the real problem. Unfortunately commis has low brain to understand real issues, otherwise they may reach the goal (power) because of their simplicity and dedication..
ReplyDeleteThis is the worst government by any standards. Every citizen has a right to criticize the govt which fails on all fronts. Communists have more brain power than the DMK people
DeleteDMK does not have any intellectuals like the communists have. but they are experts in looting Tamilnadu and make all citizens drunkards.