தமிழ்மணம் செயல்பாட்டில் இருந்த வரை எனது வலைப்பக்கத்தின் பார்வை எண்ணிக்கை ஒரு நாளைக்கு ஆயிரத்திற்கு குறையாது.
தமிழ்மணம் செயலிழந்த பின்பு பார்வையாளர் எண்ணிக்கை 600 லிருந்து 700 அன்ற அளவில் குறைந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக சொந்த வேலைகள் காரணமாக தினம் ஒரு பதிவு எழுதுவதில் சிரமம் இருந்ததால் பார்வையாளர் எண்ணிக்கை 400 லிருந்து 500 என்று குறைந்து விட்டது.
ஆனால் கடந்த ஒரு வாரமாக என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஒவ்வொரு நாள் பார்வையாளர் எண்ணிக்கையும் 1200 க்கு குறைவதில்லை. ஞாயிறு அன்று பதிவே எழுதவில்லை. ஆனால் அன்றோ பார்வையாளர் எண்ணிக்கை 1213. நேற்றும் அப்படித்தான். பதினோரு மணிக்கு 1328. காலையில் பார்த்தால் 1793.
பல வருடப் பதிவுகள் பார்க்கப்படுவதாக தெரிகிறது.
அதனால்
ஏதோ சம்பவம் வரப் போகிறது என்று உள்மனது சொல்கிறது.
I am Waiting.
சம்பவம் வருதோ இல்லையோ, பார்வையாளர்கள் இன்னும் அதிகமா வரணும். அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கு.
ReplyDelete