Thursday, June 1, 2023

நடுராத்திரி சுடுகாடு வேண்டாம் சரத்குமார்

 


"நான் ஏன்டா நடுராத்திரியில சுடுகாடு போகனும்" என்று வடிவேல் கேட்டது போல நாங்க ஏன்யா 150 வயது வரை உயிர் வாழனும் மிஸ்டர் சரத்குமார்?

 


இன்றைய அரசியல், பொருளாதார, சமூக சூழலில் 150 வயது வரை வாழ்வது எல்லாம் மிகப் பெரிய சாபம்.

 அதனால் 150 வயது வாழ்வும் வேண்டாம், அதற்காக நீங்கள் முதலமைச்சர் ஆகவும் வேண்டாம்.

 பிகு: அப்படியே தேவையென்றால் நூற்றான்டை கடந்த பிதாமகர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யா,  அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான தோழர் சந்திரசேகர் போஸ், இன்னும் சில மாதங்களில் நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும் முன்னாள் கேரள முதல்வருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொள்கிறோம். உம்முடைய முதலமைச்சர் டீலிங்கை எல்லாம் ஏற்க முடியாது.

1 comment:

  1. rummy விளையாடினால் 150 ஆண்டுகள் வாழலாமாயிருக்கும். இவரை முதலமைச்சராக்கினால் வேண்டாம் 2024-இல் பிரதமராக்கினால் ரம்மியை தேசிய விளையாட்டாக அறிவித்து அனைவரையும் 150 ஆண்டுகள் வாழச்செய்வார்.

    ReplyDelete