Monday, June 19, 2023

செய்தி-கருத்து-அவதூறு

 


 எஸ்.ஜி.சூர்யாவை கைது செய்தது கருத்துச் சுதந்திரப் பிரச்சினையா? சங்கிகள் குதிப்பதில் நியாயம் இருக்கிறதா?

ஒரு செய்திக்கும் அதன் மீதான கருத்துக்கும் அவதூறுக்கும் என்ன வித்தியாசம்?

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

புல்வாமாவில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே.

தாக்குதல் நிகழ்ந்த பின்பு ஒரு தகவல் வெளி வந்தது.





எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பயணிக்கும் பாதையில் தீவிரவாதத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக வந்த உளவுத்துறை தகவலை மத்தியரசு அலட்சியம் செய்தது.

மேலே உள்ளது செய்தி.

மக்களவை தேர்தலில் ஆதாயம் பெற மத்தியரசு உளவுத்துறை தகவலை அலட்சியம் செய்திருக்கலாம்.

இது கருத்து.

மக்களவைத் தேர்தலில் ஆதாயம் அடைய மத்தியரசே தீவிரவாதத் தாக்குதலை ஏற்பாடு செய்தது என்று சொன்னால் இதுதான் அவதூறு. சங்கிகள் செய்வதெல்லாம் வெறும் அவதூறு.



1 comment:

  1. நல்ல விளக்கம் (உதாரணத்துடன்) அவைநாயகன்

    ReplyDelete