Friday, June 9, 2023

அனுமான் சரி, இவர்களுக்கு அனுமதி?

 



பிரபாஸ் நடித்த ஆதி புருஷ் படம் திரையிடப்படும் அனைத்து திரை அரங்குகளில் அனுமானுக்காக ஒரு சீட் காலியாக விடப்படும் என்ற அறிவிப்பு  தொடர்பாக ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் ஆர்.விஜயசங்கர் அவர்களின் முகநூல் பக்கத்தில் இந்த வடிவேலு படக்காட்சியின் காணொளி பகிர்ந்து கொள்ளப்பட்டது.

 


அந்த காணொளியை பார்த்தவுடன் தோன்றிய கேள்வி.

 அனுமானுக்காக ஒரு இருக்கையை காலியாக விடக் கூடியவர்கள் குரங்கை வைத்து வாழ்க்கை நடத்துபவர்களுக்கு காசு வாங்கிக் கொண்டு இருக்கை தருவார்களா இல்லை வடிவேலு மாதிரி துரத்தி விடுவார்களா?

 சாலையில் அடிபட்டு இறக்கும் குரங்குக்கு பெரிய சைசில் அனுமன் சிலை வைப்பதோடு அவர்கள் அனுமன் பக்தி முடிந்து விடுமா?

 “அனுமனுக்கு ஒரு இருக்கை” தொடர்பாக எனக்கு ஒரு சின்ன டவுட்டு.

 வெளியிடப்படும் அனைத்து திரையரங்குகளிலும் அனைத்து காட்சிகளுக்கும் உள்ள  காலி இருக்கைகளுக்கு அனுமன் செல்வாரா?  அது எப்படி சாத்தியம்? சிட்டி ரோபோ  போல பல அனுமகளை  உருவாக்கி அனுப்புவாரா? படம் படு மொக்கையாக இருந்தாலும் தொடர்ந்து பார்ப்பாரா?

 இது தொடர்பாக நான் பார்த்து ரசித்த மீம் கீழே . . .


கடைசியாக கிடைத்த செய்தி:

ஒரு இருக்கையை காலியாக விடுவதால் நஷ்டம் ஏதுமில்லை. லாபமே. எப்படி தெரியுமா?

அனுமான் இருக்கைக்கு பக்கத்து இருக்கைகளுக்கு இரட்டிப்பு கட்டணமாம். அனுமானுக்கு பக்கத்தில் அமர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறதே! அதற்கு!

யார் கண்டது! அந்த இருக்கைகளுக்கான கட்டணத்தை ஏலம் விட்டுக் கூட நிர்ணயிக்கலாம். டிமோவையே பிரதமராக்கியவர்கள் அல்லவா!

 

No comments:

Post a Comment