பாஜகவின் பொறுக்கி
எம்.பியும் மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவனுமான பிரிஜ் பூஷன் சிங்கின் மீதான போஸ்கோ புகாரை
திரும்பப் பெறுவதற்காக 500 பக்க ஆவணத்தை வேக வேகமாக தயார் செய்து நீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக
நேற்று ஆங்கில இந்துவில் செய்தி படித்தேன்.
பொறுக்கி எம்.பி மீது
முதல் தகவல் அறிக்கை பதியவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டியிருந்தது. ஆனால் அதை திரும்பப்
பெறுவதற்கு மட்டும் அநியாய வேகத்தை காண்பிக்கிறது கிரிமினல் கூட்டாளிகளின் கட்டுப்பாட்டில்
இருக்கிற டெல்லி ஏவல் துறை.
போஸ்கோ வழக்கில் இதுநாள்
வரை அந்த பொறுக்கி எம்.பி யை கைது செய்யாததற்கு டெல்லி போலீஸ் கமிஷனரை கைது செய்ய வேண்டும்.
அந்த செய்தியில் இன்னொரு
தகவல் இருக்கிறது.
“வன் தொடர்தல்
(STALKING), பெண்ணின் மாண்பை/மானத்தை சிறுமைப்படுத்தல் அல்லது மான பங்கப்படுத்துவது
(OUTRAGING THE MODESTY OF WOMEN) ஆகிய சிறு
குற்றங்களில் வேண்டுமானால் அவர் மீது வழக்கு பதிய வாய்ப்பு இருக்கிறது”
என்பது அச்செய்தி.
அடப்பாவி டெல்லி போலீஸ்
அதிகாரிகளா, இதெல்லாம் உங்களுக்கு சின்ன குற்றமா?
டிமோவின் முன்னே வாலை
ஆட்டிக் கொண்டு இருக்கும் ஜந்துக்கள் வேறெப்படி இருப்பார்கள்!!!!
No comments:
Post a Comment