Friday, June 16, 2023

ராமர் கோயில் ஊழல் - புதுசா?

 


இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள செய்தி கீழே . . .


இந்த செய்தியை படித்தவுடன் இரண்டாண்டுகளுக்கு முன்பு எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. தேடிப்பிடித்து அந்த பதிவை மீண்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, June 20, 2021

அயோத்தி கோயில் - புது ஊழல்

 


இது அயோத்தியில் புதிதாக கண்டறியப்பட்ட ஊழல்.

அயோத்தி நகர மேயர் ரிஷிகேஸ் உபாத்யாயாவின் அண்ணன் மகன் 

தீப் நாராயணன் என்பவர் ராமர் கோயில் அருகாமையில் தேவேந்திர பிரசாதாச்சார்யா என்ற லோக்கல் ராமர் கோயில் பூசாரிக்கு சொந்தமான 890 சதுர மீட்டர் நிலத்தை 20 லட்சத்துக்கு பிப்ரவரி மாதம் வாங்குகிறார். அதன் சந்தை மதிப்பு 36.50 லட்சம்.

பூசாரியிடம் 16.5 லட்சம் குறைவாக வாங்கிய தீப் நாராயணன், மே மாதம் அதனை ராமர் கோயில் ட்ரஸ்டுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சத்துக்கு விற்கிறார்.

இவர்களின் கொள்கை, லட்சியம், இலக்கு எல்லாமே ராமர் கோயில் என்று தம்பட்டமடித்துக் கொண்டு இருந்தார்கள்.

அதிலேயே கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிக்கும் பாஜக இந்திய கஜானாவிலிருந்து இதுவரை எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்?

ஆனால் முட்டாள் சங்கிகள் இப்போதும் மோடி வாழ்க என்றே கூச்சல் போடுவார்கள்.

ஊழலின் வடிவம்  ஒன்றாக இருந்தாலும் இப்போது வெளிவந்துள்ள ஊழலில்  சொல்லப்படுகிற தொகை மிக அதிகமாக இருப்பதால் இது புதிய ஊழலாகவே தோன்றுகிறது.

பழைய பதிவில் உள்ள படத்தில் சொல்லியபடி ராமர் கோயில் கட்ட வசூல் செய்த பணத்தில் ஊழலுக்காக ஒதுக்கப்பட்ட பணம்தான் பெரும் பகுதி போல!

இந்த லட்சணத்தில் இவர்கள் நீதி, நேர்மை, நாணயம் என்று கதை விட்டுக் கொண்டு எதிர்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவுகிறார்கள். 

No comments:

Post a Comment