கீழேயுள்ள பதிவை எழுதியது கலைஞர் ஆட்சியின் போது திட்டக்குழு
துணைத்தலைவராக இருந்த பேராசிரியர் நாகநாதன். ஊதியம் கொடுக்கக் கூட நிதியில்லையா
என்ற கேள்வியை உறுதிப்படுத்திக் கொண்டு பகிரலாம் என்று காத்திருந்தேன்.
ஆங்கில இந்துவில் வந்த செய்தி அதை உறுதிப்படுத்தியது.
வேந்தர் என்ற அந்தஸ்தில் வெட்டி பந்தா செய்து கொண்டு பல்வேறு
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தவிடாமல் தடுத்துக் கொண்டு மாணவர்களின்
எதிர்காலத்தை பாழாக்குகிற, அப்படியே அரிதாக நடந்தாலும் கருப்பு ஆடை அணியக்கூடாது என்று கெடுபிடி செய்கிற ஆட்டுதாடியே, சனாதன தர்மத்தின் கொ.ப.செ வாக வெட்டி வேலை
செய்வதற்குப் பதிலாக அந்த பல்கலைக்கழகங்களின் நிதி நெருக்கடியை தீர்க்கும்
வழியைப்பார். [
அதை விட உத்தமமான
வேலை ஒன்றுண்டு.
அது
பதவியை ராஜினாமா செய்து விட்டு பீகாருக்கு ஓடி விடு.
தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்கள்
நிதி நெருக்கடியில் குளுகுளு உதகையில் "சூதாட்ட புகழ்" இரவியின் ஆட்டம்
********************************************
பேராசிரியர்.மு.நாகநாதன்
============================
கொளுத்தும் கொடும் வெயிலைவிட
மாநிலங்களின் நிதிநிலை பற்றாக்குறை கொடுமையாக உள்ளது.
இதற்குப் பல்கலைக்கழகங்களும்
விதி விலக்கல்ல!
சென்னைப் பல்கலைக்கழகத்தில்
ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லதா ஊழியர்களுக்கும்,
ஜூன் மாத சம்பளம் சேமிப்பு - வைப்பு நிதியிலிருந்து எடுத்து வழங்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் நீண்ட கால நிதி பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நிதி வைப்பு முறை உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த நிதி அமைப்பின்
கணக்கிலிருந்து மாத ஊதியத்தை வழங்க பணத்தை எடுப்பது ஒரு பேராபத்தாகும்.
இந்நிலையில் உயர்த்தப்பட்ட, புதிய ஓய்வு ஊதியத்தொகை, சில ஆண்டுகளாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் வழங்கப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தரோ இதுபற்றிச் சிறிதும் கவலையின்றி,
பாஜக ஜே.பி.நட்டாவின் உடன் பிறப்பான (Twin brothers) பல்கலைக் கழக மானியக் குழுவின் துணை அமைப்பில் இடம் பெற்றுள்ள பேராசிரியர் நட்டாவைக் கடந்த கல்வியாண்டில் இரு முறை அழைத்து, அரசியல் தலைவர்களுக்குப் பதாகைகளை வைப்பது போல விளம்பரங்கள் செய்து,
உயர் கல்வி அமைப்புக்களின் நடைமுறை நெறிகளை வரம்பு மீறி வீண்செலவு செய்துள்ளார் இன்றைய துணைவேந்தர் கெளரி.
வேந்தர் எவ்வழியோ
துணை வேந்தரும் அவ்வழியே!
துணை வேந்தர்கள் மாநாட்டை குளுகுளு உதகையில் கூட்டலாமா?
பல நூறு ஏக்கர் நிலத்தில்
பழங்கால மா மன்னர்கள்
போல் சொகுசு வாழ்க்கை வாழும்
ரவி கிண்டியில் அரசு இருப்பிடத்தில்
கூட்டலாம் அல்லவா?
இணைய வழியாகப் பல பன்னாட்டுக்
கருத்தரங்கங்கள் நடைபெறுகிறதே!
ஏன் இந்திய பிரதமர் நரேந்திரர் உட்பட அத்தகைய இணைய வழி கருத்தரங்கில் பங்கு கொள்வது ஆளுநர் இரவிக்குத் தெரியாதா!
தமிழ்நாடு அரசு ஆளுநர் செலவிற்குச் செய்யும் நிதி ஒதுக்கீடு அளவு,
மற்ற மாநிலங்களின் ஆளுநர்களுக்குக் கொடுக்கப்படும் நிதியைவிடப் பன்மடங்கு அதிகம் என்பதை நடந்து முடிந்த சட்டமன்ற நிதி நிலை தொடர் கூட்டத்தில் நிதி அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராசன் புள்ளிவிவரங்களுடன் விளக்கம் அளித்தாரே!
அதிகமாக ஒதுக்கீடு செய்த நிதியை இரவி நிதி நெறிகளை மீறி செலவு செய்தது வெளிச்சத்திற்கு வந்ததே!
டெல்லியில் கட்டும் புதிய வீட்டைப் பார்ப்பதற்கு வானூர்தியில் செல்கிற போது இரவித் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு
ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டை
அதிகம் பெற வேண்டுகோள் வைக்கலாமே!
நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில்
ஒன்றிய அரசுக் கல்விக்காகச் செய்யும்
செலவு 1.7 விழுக்காடு அளவில் தானே உள்ளது.
இந்தத் தொகையில் 80 விழுக்காட்டிற்கு மேல் ஒன்றிய அரசின் உயர் கல்வி அமைப்புகளுக்குச் சென்று விடுகிறது.
மாநிலப் பல்கலைக்கழகங்கள் பெறும் நிதி மிக மிகக் குறைவாகும்.
1966 ஆம் ஆண்டில் பேராசிரியர் கோத்தாரி ஆணையம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 6 விழுக்காடு கல்விக்குச் செலவிட வேண்டும் என்று வலியுறுத்தியதே!
ஏதாவது நீங்கள் ஆக்கப் பூர்வமான தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டும் என்றால்
இது போன்ற ஆணையங்கள், கல்வி வல்லுநர்கள் அளித்த பரிந்துரைகளை ஏற்று நிதிப் பற்றாக்குறையால் பரிதவிக்கும் பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியிருக்க வேண்டும்.
சான்றாக பிரதமர் நரேந்திரர் உரையைக் கேட்பதற்காக
மனதின் குரல் நிகழ்ச்சிக்கு ரூபாய்
4000 கோடியை ஒன்றிய அரசு செலவிட்டுள்ளது.
100 வது மனதில் குரல் நிகழ்ச்சியை
22 மொழிகளில் ஒலிபரப்பு செய்த தொகை எவ்வளவு என்பது இனிமேல் தான் வெளிச்சத்திற்கு வரும்.
இது போன்ற எண்ணற்ற வீண் செலவுகளை
ஒன்றிய அரசு தவிர்த்துத் தமிழ்நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்று நீங்கள் பரிந்துரை செய்யலாம்.
செய்ய மாட்டீர்கள்.
செய்யாவிட்டாலும்
தமிழ் மக்களின்
வரிப்பணத்தில் குளுகுளு உதகையில் துணை வேந்தர்களைக் கூட்டி கூத்தடிக்கலாமா?
வாய் திறந்தால் உளறல்கள்.
செயலில் சங்பரிவார் கும்பல்களின் அடியாள்.
அறிஞர் அண்ணா
"ஆட்டுக்குத் தாடி நாட்டுக்கு கவர்னர் "
என்ற இரு அறிவூட்டும் சொற்றொடர்களைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்பரிவார கும்பல் பரிந்துரையால்
புது தில்லி துள்ளுகிற மாடுகளால்
இறக்கப்பட்ட கால் பழுதான ஆடு
கறிக் கடையில் கூட விலை போகாது.
நாகாலாந்து இளைஞர்களால்
கால் ஒடித்து அனுப்பப்பட்ட
கிண்டி ஆடு
போடுவது எல்லாம்
முடைநாற்றம் வீசும்
புழுக்கைகளே என்பதைத்
தமிழ்நாட்டு மக்கள் அருவருப்பாகப் பார்க்கிறார்கள்.
அடிக்கும் கொட்டமும்
ஆடும் ஆட்டமும் 2024ஆம்
ஆண்டில் ஒடுக்கப்படும்
மக்களால் என்பது உறுதி.
No comments:
Post a Comment