மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் கீழேயுள்ள அழைப்பிதழை
வெளியிட்டு ஒரு கட்டுக்கதை ஒன்றை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
அரைகுறை வரலாறு ஆபத்தானது.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் அடிக்கல் நாட்டு
விழா அழைப்பிதழை இத்தளத்தில் நேற்று இருவர் வெளியிட்டு “திருவள்ளுவர் சிலையை
கலைஞர் உருவாகியதாக சொல்வது எல்லாம் பொய், ஸ்டிக்கர் ஒட்டி, திராவிட ஸ்டாக் etc, etc”
எல்லாம் எழுதியிருந்தார்கள்.
அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்த அழைப்பிதழ் உண்மைதான்.
லேட்டஸ்டாக புதிய தொழில் நுட்பங்களோடு தயாரிக்கப்பட்ட கல்வெட்டை 15.08.1947 அன்றே
தயாரித்தது போன்றதெல்லாம் அல்ல. உண்மையானதுதான். அடிக்கல் நாட்டியவர் அன்றைய
பிரதமர் திரு மொரார்ஜி தேசாய்தான். எம்.ஜி.ஆர் ஆட்சிதான்.
அது மட்டும்தான் உண்மையா?
திருவள்ளுவர் சிலைக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லையா?
நான்காண்டுகள் முன்பாக கன்னியாகுமரி சென்ற போது திருவள்ளுவர்
சிலைக்கும் சென்றிருந்தேன். திருவள்ளுவர் சிலை திறப்பு விழா தொடர்பாக அங்கே
பார்த்த கல்வெட்டை எதற்கும் இருக்கட்டும் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
அந்த கல்வெட்டு உண்மையான வரலாற்றை சொல்கிறது.
திருவள்ளுவருக்கு சிலை வைப்பது என்ற முடிவை 1975 ல் திமுக
அமைச்சரவை எடுத்து அறிவிக்கிறது.
அந்த அறிவிப்பின்படி 1979 ல் அதிமுக அரசு அடிக்கல்
நாட்டுகிறது.
அடிக்கல் நாட்டு விழா நடந்ததே தவிர சிலை அமைக்கும் பணி
தொடங்கவே இல்லை. இது தொடர்பாக எம்.ஜி.ஆரை கண்டித்து கலைஞர் பேசியது எனக்கு
நினைவில் உள்ளது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்பு மீண்டும் திமுக ஆட்சி வந்த
பின்புதான் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கான பணிகள் தொடங்குகிறது. மீண்டும் ஆட்சி
மாற்றம். அதன் பிறகு பணி தொடர்ந்து திறப்பு விழாவும் நடைபெற்றது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் மொரார்ஜி தேசாய் அடிக்கல் நாட்டினார்
என்ற உண்மையெல்லாம் மூடி மறைக்கப்படவில்லை.
திருவள்ளுவர் சிலைக்கும் கலைஞருக்கும் தொடர்பில்லை என்று
சொல்வது எல்லாம் காழ்ப்புணர்வு தவிர வேறொன்றுமில்லை.
அதே போல வள்ளுவர் கோட்டம் முழுக்க முழுக்க கலைஞரின்
முயற்சிதான். ஆனால் அது திறக்கப்பட்ட போது அவர் பதவியில் இல்லை. அதனால் அவருக்கும்
வள்ளுவர் கோட்டத்திற்கும் சம்பந்தமில்லை என்றாகி விடுமா?
வரலாற்றை அரைகுறையாக சொல்வது சொல்பவருக்கே ஆபத்தானது, ஆம் அவர்
மீதான நம்பிக்கை பறி போகும். அவர் சொல்வது 100 % உண்மையாக இருந்தால் கூட அதனை
பொருட்படுத்தத் தோன்றாது.
முக்கியமான பின் குறிப்பு : இப்பதிவுக்காக என்னை 200 ரூபாய்
உடன் பிறப்பு என்று முத்திரை குத்தும் முன்பாக தயவு செய்து என் முகநூல் பக்கத்தை
பார்த்து விடுங்கள். அதை நான் பூட்டி வைக்கவில்லை. என் அரசியல் சார்பு
வெளிப்படையாகவே இருக்கும். உங்கள் நேரத்தை
விரயம் செய்ய வேண்டாம் என்ற நல்லெண்ணம்தான்.
நான் எதிர்பார்த்தது போலவே சங்கிகள் பின்னூட்டங்களை குவித்து
விட்டார்கள். நான் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. இது நாள் வரை இல்லாத அதிசயமாக பேர்
லைக்குகளும் பேர்
ஹார்ட்டின்களும் போட்டிருந்தனர், பேர்
சிரித்து வைத்திருந்த போதும். பதிவுக்கு ஆதரவான பின்னூட்டங்களும் வந்திருந்தன. சங்கிகளுக்கு
எதிராக இத்தனை பேர் ஆட்டுக்காரன் குழுவில் உள்ளார்கள்.
ஒரு குழந்தைக்குக் கூட புரியும் வகையில் எளிமையாக, சுருக்கமாக
எழுதினாலும் “சங்கிகள் அயோக்கியர்களாகவும் அடி முட்டாள்களுமாகவே இருக்கிறார்கள்”
என்ற என் மதிப்பீட்டை லட்சமாவது முறையாக நிரூபிக்கும் வண்ணம் பின்னூட்டம்
எழுதினார்கள்.
அவை கீழே. . .
************************************************************************
அதெல்லாம் சரி,
இந்த மாதிரி எண்ணம் வரக் காரணம்???
133 அடியில் திருவள்ளுவர் சிலை,
134 அடியில் அவரது எழுத்தாணிக்கா சிலை??
இல்லையே
************************************************************
உ பி கள் மத்திய அரசு திட்டம்த்தை இவர்கள் label ஒட்டுவது சரியா??
******************************************************************************
நல்ல கேள்வி. லேபிள் ஒட்டுவதெல்லாம் அவருக்கு வரலாற்றில் வராது.
************************************************************************************
கலைஞர் பழம்
சாப்பிட்டார். விதை எம்ஜியார் போட்டது
*********************************************************************************
நீங்க
கதை சொல்லவும், நாங்க கதை கேட்கவுமே பிறந்தோமா? உங்க " கதை"யை நீங்களே
**************************************************************************************************
நீங்கள் கூறிய செய்தி
உண்மையா தெரியவில்லை,,, ஆனால் சொல்கிறீர்களே என்று நம்பி பார்த்தேன் நீங்க பாமரன் என்றெல்லாம்
வரவேண்டாம்,,, உங்க ப்ரொபைலை ஒருநிமிடம் பாத்ததுலேயே தெரிகிறது முழு நேர உபி என்று.
*******************************************************************************************
வில்லிவாக்கம் ரெயில் பாலம் ஜெ ஆட்சியில்
ஆரம்பிக்கப் பட்டது.
கல்வெட்டில் ஸ்டாலின் பெயர்.
ஆம்பூர் பிரியாணி........
*****************************************************************************************
பாடப்புத்தகத்தில தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்
விருதைப்படிச்சதுக்கப்புறமா வந்த அவநம்பிக்கைங்க! மாற பல வருஷமாகும்
*********************************************************************************
கருணாநிதி திருவள்ளுவருக்கு சிலை வைத்ததில் ஒரு
நல்லது இருக்கு.
அது சங்கிகளுக்கும் தெரியாது, ஊபீஸ்களுக்கும்
தெரியாது
************************************************************************************
கூவத்தில் முதலையை விட்டாரே அவரைப் பற்றி
கல்வெட்டு
இருக்கிறது அதைப்பற்றி ஏன் பேச மாட்டேங்கிறீர்.
சர்க்கரை மூட்டையை எறும்பு இழுத்துச் சென்றது
எலி இழுத்துச் சென்றது என்று சொன்னவரை பற்றி கல்வெட்டு இருக்கிறது அதைப் பற்றி
சொல்லலாமே
******************************************************************************
நீங்கள் பாருங்கள் அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலின் உதயா நிதி தலைமையில்
மறுசீரமைப்பு செய்ய பட்டுள்ளது என்று வரும். சும்மா உடுங்க சார். தமிழ் நாட்டில் மன்னர்கள்
பரம்பரை அரசியல் ஆட்சி நடக்கிறது இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது
**************************************************************************************
உங்கள் கருத்துக்கு வருகிறேன்.1975ல் முடிவெடுக்கப்பட்டது ஏன்
எம் ஜி ஆர் ஆட்சி 1979 வரை சிலை நிறுவ படவில்லை?
****************************************************************************************
இந்த திருவள்ளுவர் சிலை நிறுவியதில் கலைஞர்
கருணாநிதிக்கு தொடர்பு இருக்கிறது.
" ஊழலில் தொடர்பு இருக்கிறது " .
எப்படி என்றால், முன்பக்கம் திருவள்ளுவரைப்
பார்த்தால் நின்று கொண்ட கோலமும், பின்பக்கம் பார்த்தால் பாதி அமர்ந்த நிலையில்
இருப்பார்.
"திருவள்ளுவரிலும் ஊழல் ". அதனால்,
நிச்சயம் அவருக்கு தொடர்பு இருக்கிறது
*********************************************************************************
இதுதான் உண்மை. அவர் திட்டங்கள் தீட்டுவதே ஊழல்
செய்வதற்காகத்தான். அதை மகனும்
தொடர்கிறார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு சைக்கிள் வாங்கியதில்
அப்பட்டமான ஊழல்.
தொட்டதில் எல்லாம் ஊழல், லஞ்சம் தலைவிரித்து
ஆடுகிறது.
தமிழ்நாட்டில் கமிஷன், கலெக்ஷன் & கரப்ஷன்
பற்றி நாடே வியந்து போய் நிற்கிறது .
இதைக் கட்டுக்குள் கொண்டு வர முதல்மந்திரிக்குத்
திராணி இல்லை.
இனிமேல்.... கருணாநிதிதான் அதைக் கொண்டு
வந்தாரு....இதைக் கொண்டு வந்தாருனு சொல்லித் தம்பட்டம் அடிக்காதீர்கள்
கொத்தடிமைகளே.
திருவாரூர் சோழியன் குடுமி என்றுமே சும்மா ஆடியதே
இல்லை.
ஆட்டி ஆட்டித் தனக்கு குடுமி இல்லாமல் போய்
மாமன், மச்சான்,மச்சானின் பிள்ளைகள் தன் மகள் ஆகிய எல்லோரது குடுமிகளும் ஆடி
இந்திய அளவில் ஊழலில் திளைத்துக் கொள்ளை அடித்ததை உலகமே அறியும்.
******************************************************************************
கன்னியாகுமரியில் கடலுக்குள் இருக்கும்
விவேகானந்தர் பாறைக்கு அருகில் உள்ள 133அடி திருவள்ளுவர் சிலை அமைவதற்கு கருணாநிதி
தான் காரணமாக இருந்தார் என்று நம்பி கொண்டு இருக்கும் திராவிட கோமாளிகளுக்கு
மட்டும் இந்த செய்தி.
தமிழகத்தில் பல வரலாற்றை மறைத்து திரித்து
தாங்கள் செய்யாததை கூட தாங்கள் தான் எல்லாமே செய்தோம் என்று புதிய வரலாற்றை
எழுதுவதில் திமுகவிற்கு இணை திமுக மட்டுமே
இதோ இந்த அழைப்பிதழை காணுங்கள்.
நன்றி திரு Rajagopal Natarajan அவர்கள்.
*******************************************************************************
ஊரையே கொள்ளையடித்து
எல்லை கோவில் உண்டியலுக்கு "கடமை"யோடு
காலனா காணிக்கையிட்டவனை புகழ்வதுதான் "கண்ணியம்"
அதற்கு எதற்கு "கட்டுப்பாடு"
******************************************************************************
வாழும் வள்ளுவர் கலைஞர் வாழ்க என சொல்லி முடித்து இருக்கலாம்
************************************************************************************
கண்ட கண்ட இடங்களில் எல்லாம் கபோதிகளின் சிலைகளை
அமைத்து அதன்மூலம் சாதி வெறி மற்றும் கலவரத்தைத் தூண்டியது,,கூவத்தைச் சீரமைத்தது,
வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வர ராட்சத
சைஸ் குழாய்கள் போட்டது....சர்க்கரையை எறும்புக்குத் தானமாகக் கொடுத்தது....
போன்ற நல்ல பல செயல்களைச் செய்த கருணாநிதியைப்
பாராட்டாமல் இருக்க முடியுமா?
********************************************************************************
சரி, சிலை வைத்தவன் பேரெல்லாம் திரு. என்று மரியாதையாக போட்டுக்
கொண்டு சிலைக்குரிய தெய்வத்தமிழ்ப் புலவரை வெறுமனே வள்ளுவர் என்று போட்டு, திருவள்ளுவரை
மரியாதை குறைத்தது ஏன்?...மொத்தத்தில் சிலை தயாரித்து கடலில் நிற்க வைப்பதற்கு கமிஷன்
பேரம் 1979-2000-ம் வரை படியவில்லை போல, வீணான திராவிட மாடல்
****************************************************************************************
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால்
எப்படியோ.....
அதுபோலவே கட்டுமரமும்....
*******************************************************************************
அதெல்லாம் சரி, கருணாநிதி ஏன் திருநீறு இல்லாமல் திருவள்ளுவர்
சிலையைச் செய்தார்?
*********************************************************************************
மிகவும் நேர்மையான பதிவு. எங்கள் கிராமத்தில்
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை ( போதுமான பக்க வரும்படி வராததால் இன்னும்
செயல் படுத்தவில்லை) தற்போதைய அரசு சொல்லிக்கொடுத்தபடி பஞ்சாயத்தார் அத்திட்டத்தை
"அண்ணா மறுமலர்ச்சி" திட்டமென்று தமிழ்படுத்தி ʟᴀʙᴇʟ
ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த மாதிரி தகிடுதத்தங்களுக்கு கழகங்கள்தான்
முன்னோடி என்பதற்காக சொல்கிறேன்
****************************************************************************************
திருவள்ளுவர் இப்படித்தான் இருந்தார் என்பதற்கு எனன ஆதாரம்
******************************************************************************************************
சங்கிகளுக்கு சுய புத்தியும் கிடையாது, சொல் புத்தியும்
கிடையாது என்பதை ஒவ்வொரு சங்கியின் பின்னூட்டமும் உணர்த்தும். பதிவு அவர்களின் கட்டுக்கதையை தகர்ப்பது பற்றி
கவலைப்படாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் வாந்தி எடுத்திருக்கிறார்கள். இதிலே ஒரு
அறிவுக் கொழுந்து பதிவுக்குக் காரணமான பதிவையே பின்னூட்டமாக போட்டுள்ளார். 1975 ல்
அவசர நிலைக் காலத்தில் திமுக அரசு கலைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் 1975
லிருந்து 1979 வரை ஏன் எதுவும் செய்யவில்லை என்று புத்திசாலித்தனமாக கேட்பதாக
நினைத்துக் கொண்டு தன் மூடத்தனத்தை நிரூபித்துள்ளார்.
இந்த மூடர்கள்தான் டிமோவின் மூலதனம்.
உண்மையை உள்ளது உள்ளபடி உரக்க கூறியுள்ள பதிவு, அருமை அவைநாயகன்
ReplyDeletelet us know your facebook id please
ReplyDelete