நேற்று பகிர்ந்து கொள்வதற்காக எழுதிய பதிவு கீழே உள்ளது. இப்போது நிலைமை மாறி விட்டது. தந்தை பெரியார் பல்கலைக்கழகம் தன்னுடைய கடிதத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது.
சேலம் மாவட்ட காவல்துறை, சேலம் மாநகர காவல்துறை என்பதில் ஏதோ வார்த்தை விளையாட்டு இருப்பதாக தெரிகிறது.
இருப்பினும் ஆவணங்களின் படி பல்கலைக் கழக துணை வேந்தர் பொய் சொல்வதாக இருப்பதால் அவரை பணி நீக்கம் செய்வதுதான் பொருத்தம்.
முதல்வருக்கு நேற்று எழுதிய கடிதம் கீழே உள்ளது. காவல்துறை மீதும் சந்தேகம் இருப்பதால் அதனை பதிவு செய்கிறேன்.
அது காவித்துறையா முதல்வரா?
வாழ்நாள்
முழுதும் கருப்புச்சட்டை அணிந்து கொண்டிருந்தவரின் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின்
பட்டமளிப்பு விழாவிற்கு யாரும் கருப்பு ஆடை அணிந்து வரக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கிறது
சேலம் தந்தை பெரியார் பல்கலைக்கழகம்.
காவல்துறை
அறிவுறுத்தல் என்று காரணமும் சொல்கிறது. தமிழ்நாட்டு மக்களின் விரோதி, சனாதன பிரச்சாரம்
என்ற பெயரில் விஷத்தை கக்கும் ஆட்டுத்தாடி ஆர்.எஸ்.எஸ் ரவிக்கு யாரும் கருப்புக் கொடி
காண்பித்து அந்தாள் மனம் புண்படக்கூடாது என்று உங்கள் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கு
ஏன் இவ்வளவு அக்கறை?
நாகரீகம்
காண்பிக்க வேண்டிய ஆளா ரெவி? அந்தாளின் உரைகள் எல்லாம் நேரடியாக உங்களையும் உங்கள்
அரசையும் கடுமையாக தாக்கும் போது பெருந்தன்மையை காண்பிக்க வேண்டுமா? இல்லை அதெல்லாம்
அந்தாளுக்கு புரிந்து மனம் திருந்தத்தான் வாய்ப்பிருக்கிறதா?
கொஞ்ச
நாள் முன்புதான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்க வந்த இந்திய மாணவர்
சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் அரவிந்த்சாமியின் உள்ளாடை வரை அகற்றி அசிங்கப்படுத்தியது
உங்கள் காவல்துறை என்பது உங்களுக்குத் தெரியுமா?
காக்கிச்சட்டைக்கு
பதிலாக காவிச்சட்டை அணிந்து கொண்டு விட்டதா தமிழ்நாடு காவல்துறை? உங்கள் கட்டுப்பாட்டில்
காவல்துறை இருக்கிறதா இல்லையா?
“தந்தை
பெரியாரின் கைத்தடி அடித்து விரட்டிய சனாதன ஆடையை அணிந்து வரக்கூடாது என்று ஆளுனருக்கு
காவல்துறை அறிவிறுத்தட்டும்” என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி தோழர் சு.வெங்கடேசன்
நக்கலாக போட்ட பதிவு போல ஒரு சாதாரண எதிர்வினை கூட ஏனில்லை உங்கள் கட்சியிலிருந்து?
காவல்துறையில்
ஊடுறுவியுள்ள காவியாடுகளை களை எடுக்காவிட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான் . . .
No comments:
Post a Comment