யாரோ ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியை கைது செய்தது போல நேற்றைக்கு மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் புலம்பிக் கொண்டிருந்தார்கள். புலம்பலின் சவுண்டே அந்தாள் மோசமானவனாகத்தான் இருப்பான் என்பதை சொல்லாமல் சொல்லியது. (பிணை கிடைத்து விட்டதாகவும் இப்போது தகவல்கள் உலாவுகிறது)
அந்தாள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் கீழே உள்ளது.
போட்டோஷாப் செய்து பொய்ப்பிரச்சாரம் செய்பவனை கைது செய்யாமல்
கொஞ்சிக் கொண்டா இருக்க முடியும்!
அப்படிப்பட்டவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று மானங்கெட்டத்தனமான ஆலோசனைகள்
சொல்லும் “எல்லோருக்கு நல்லவர்களை” கடுப்போடு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது
என்பது வேறு விஷயம்.
இந்த மாதிரியான வதந்திகளை, பொய்ப்பிரச்சாரம் செய்து சமூக
அமைதியை குலைக்கும் ஆசாமிகள் யாராக இருந்தாலும் சரி, யாருக்கு நெருக்கமாக
இருந்தாலும் சரி, என்ன பதவியில் இருந்தாலும் சரி, இருந்திருந்தாலும் சரி,
யுவராஜுக்கு கொடுக்கப் பட்டது போல “சாகும் வரை சிறை” தண்டனைதான் சரி.
No comments:
Post a Comment