Monday, March 13, 2023

மோடியை சொல்ல முடியலையே

 


நேற்று "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் பார்த்த பதிவு கீழே உள்ளது. 


ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் "குஜராத்தில் நரேந்திர மோடியின் பெயரில் அமைக்கப்பட்ட ஸ்டேடியத்தில் இஸ்லாமாபாத்தில் பிறந்த உஸ்மான் க்வாஜா செஞ்சுரி அடித்தது சிறப்பானது. விளையாட்டிற்கு அரசியல் போல எல்லைகள் கிடையாது"

என்று ட்விட்டரிட

கோபம் வந்த ஒரு சங்கி

"ஆஸ்திரேலிய அரசால் தீவிரவாத நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்ட ஒருவரின் சகோதரர், அஹிம்சைக்கு உதாரணமான மகாத்மா காந்தியின் மண்ணில்" 

என்று மாற்றி எழுது என்று உத்தரவு போட

அதை இன்னொரு சங்கி "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில்  பகிர்ந்து கொண்டது.

பாவம், ஒரு உதாரணத்திற்காக இவர்களால் மோடியை சொல்ல முடியவில்லை. மோடியை விட பெரிய பயங்கரவாதி, கிரிமினல் வேறு யாரும் கிடையாது என்று அவர்களுக்கும் தெரியுமே!

No comments:

Post a Comment