Thursday, March 16, 2023

அமைதி நோபல் - மோடி டுபாக்கூர்

 


நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் ஆஷ்லே டோஜோ என்பவர் இந்தாண்டு நோபல் அமைதிப்பரிசுக்கான பட்டியலில் முக்கியமான இடத்தில் மோடி இருக்கிறார். ரஷ்ய-உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துவதை தடுத்த காரணத்தால் அவர் அதற்கு தகுதியாகிறார் என்று சொன்னதாக நேற்று முழுதும் சங்கிகள் பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

நோபல் அமைதிப் பரிசு என்பது மதிப்பிழந்து எத்தனையோ காலமாகி விட்டது.

பனிப்போர் காலத்தில் சோவியத் யூனியனுக்கு எதிரானவர்களை தேடி தேடி விருது கொடுத்தார்கள்.

சீனாவுக்கு எதிராக தலாய் லாமா,
ஆப்கானிஸ்தானிலிருந்து படைகள் வெளியேறும் என்று சொன்னதற்காகவே பாரக் ஓபாமா,
ரோஹிங்க்யா முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களை வேடிக்கை பார்த்த ஆங்-சான்-சுகி

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

அதனால் 

ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களை குஜராத்தில் கொன்ற கொலைகாரரும்,

அரசியல் ஆதாயத்திற்காக புல்வாமாவில் ராணுவ வீரர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த கொடூர புத்திக் காரரும்,

செல்லா நோட்டு, கொரோனா கதவடைப்பு, மாட்டுக்கறி, மத வெறிக் கலவரங்கள் என்று தொடர்ச்சியாக இந்திய உயிர்களை குடித்து வரும்

மோடிக்கு நோபல் அமைதி விருது கொடுத்தாலும் அதில் வியக்க ஏதுமில்லை.

ஆனால்

அப்படியெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை என்று அந்த மனிதன் சொல்லி விட்டார்.

Clarifying about a viral tweet claiming PM Modi as a Nobel peace prize contender, Toje said that the tweet was fake. "I am the deputy leader of the Nobel committee. A fake news tweet was sent out. We should treat it as all fake news. It's fake. Let's not discuss it. Let's not give it any energy or oxygen. I categorically deny that I said anything resembling what was in that tweet."

ஆகவே இந்த செய்தியும் வழக்கமான மோடி டுபாக்கூர் செய்திதான். 

இருப்பினும் 

இந்த டுபாக்கூர் செய்தியை நிஜமாக்க மோடி முயற்சிக்கலாம்.

80 கோடி ரூபாய் செலவு செய்தால் ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்று பேசுகிறார்கள்.

மோடிக்கு நோபல் விருது கிடைக்க அது போல பத்து மடங்கு தொகையை அதானி, அம்பானி செலவழிக்க மாட்டார்களா என்ன? 

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete