மிஸ்ட் கால் மூலமாக கோடிக்கணக்கில் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கிறார்களாம்.
அதற்காக செய்யப்படும் தில்லாலங்கடி வேலைகளை கீழேயுள்ள படம் அம்பலப்படுத்தி விடுகிறது.
சமையல் எரிவாயு மானியத்தை விட்டுகொடுக்க வேண்டும் என்று அன்றாடம் செல்வந்தர்களிடம் மன்றாடுகிற மோடிஜி அவர்களே, கோடிக்கணக்கில் உள்ள உங்கள் கட்சி உறுப்பினர்களிடம் சமையல் எரிவாயு மானியத்தை விலக்கிக் கொண்டால்தான் கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும் என்று நிபந்தனை போடுங்களே.
மிஸ்ட் கால் கொடுத்த வேகத்திலேயே உங்கள் கட்சியை விட்டு ஓடி விடுவார்கள்.
மிஸ்ட் கால் கொடுத்தவர்களே எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் தொலைபேசி எண்ணை வைத்து நீங்களே சமையல் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்ததாக ஏதாவது தில்லுமுல்லு வேலைகள் செய்யப் போகிறார்கள்.போட்டோஷாப் மோசடி மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிதானே மிஸ்ட் கால் கட்சி! எதற்கும் சிம் கார்ட் மாற்றி விடுங்கள்.
loosa nee
ReplyDeleteநானா இல்லை இன்னும் மோடியை நம்பிக்கிட்டிருக்கிற நீயா?
Delete