Tuesday, April 7, 2015

மோடிஜி, யார் அந்த 5 ஸ்டார் ஆட்கள்?


https://jewishseniorliving.publishpath.com/Websites/jewishseniorliving/images/5-stars.jpg
 http://bdflower.com/wp-content/uploads/2012/02/5star.jpg
ஃபைவ் ஸ்டார் என்ற பெயரில் சாக்லேட் தெரியும். ஐந்து நட்சத்திர விடுதிகள் தெரியும்.

புதிதாக முளைத்துள்ள ஒரு வார்த்தை ஐந்து நட்சத்திர செயல்பாட்டாளர்கள். 

யார் அவர்கள்?

அவர்கள் தொடுக்கும் வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்கும்படி மோடி ஏன் நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்?

இதன் மூலம் நீதித்துறைக்கு மோடி அரசு விடுத்துள்ள செய்தி அல்லது எச்சரிக்கை அல்லது மிரட்டல் என்ன?

மனித உரிமை ஆர்வலர்கள், சுற்றுச் சூழல் போராளிகள்  ஆகியோர் ஏதாவது வழக்கு தொடுத்தால் அவற்றில் கவனமாக இருந்து அதை நிராகரிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நீதித்துறைக்கும் மோடி விடுத்துள்ள எச்சரிக்கையன்றி வேறொன்றும் இல்லை.

இந்த லட்சணத்தில் இவர் மரியாதைக்குரிய நமது பிரதமராம்!
 

6 comments:

  1. I am slightly busy. I will come back and reply

    ReplyDelete
  2. இது மிரட்டல் தான். மடியில் கனமில்லையேல் பயமெதற்கு?

    ReplyDelete
  3. Don't turn everything Modi says into a controversy.
    What he is telling is there are some frauds calling themselves as activists, but heavily sponsored by foreign elements and usectgat obey to a five star hotel life.
    Such guys disrupt India progress by unnecessary law suits.
    Judiciary should not encourage them

    ReplyDelete
    Replies
    1. சர்ச்சைக்குரிய விஷயங்களை மட்டுமே பேசுவதை நிறுத்திக் கொள்ளுமாறு மோடிக்கு அறிவுரை கூறுங்கள். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை சூறையாடுவது. காலம்காலமாக ஒரு இடத்தில் வாழ்ந்து வரும் ம்க்களை அப்புறப்படுத்துவது போன்ற அயோக்கியத்தனங்கள் செய்வதை நிறுத்தச் சொல்லுங்கள். பாசிசத்தை நோக்கி மோரி போய்க் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம் அப்பேச்சு. அதையும் நியாயப்படுத்த சில அடிமைகள் அவருக்கு கிடைத்திருப்பது இந்திய ஜனநாயகத்திற்கு ஆபத்து

      Delete
    2. Taruda, née enna loosa? Are you loose? Do you know what is the difference in development and environment protection?

      Delete
  4. இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி

    மோடியின் விமர்சனம்: மனித உரிமை அமைப்புகள், வழக்கறிஞர்கள் கண்டனம்

    புதுதில்லி, ஏப். 7-

    நாட்டின் பொதுப் பிரச்சனைகளுக்காக வழக்கு தொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்களை ‘நட்சத்திர செயல்பாட்டாளர்கள்’ என்று மோடி அநாகரீகமாக விமர்சனம் செய்துள்ளதற்கு நாடு முழுவதும் மனித உரிமை அமைப்புகளும், வழக்கறிஞர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    நரேந்திரமோடி கடந்த ஞாயிறன்று மாநில முதல்வர்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கேற்ற மாநாட்டில் உரையாற்றினார். அப்போது மக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்காக பொதுநல வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் தொடுக்கும் சமூக செயல்பாட்டாளர்களை ஐந்து நட்சத்திர செயல்பாட்டாளர்கள் என்று கேலி செய்து பேசினார். அதாவது இவர்கள் சமூகத்தின் மேல் மட்டத்திலுள்ளவர்கள்; அவர்களின் புரிதலின் அடிப்படையாகக் கொண்டு வழக்குகள் எடுத்துக் கொள்ளப்படுவதாக பூடகமாக குறிப்பிட்டார்.

    ஒரு நாட்டின் பிரதமர், பொதுமக்களின் நலன் கருதி வழக்கு தொடுப்பவர்களை கேலி செய்வது அநாகரீகமானது என்று கூறி நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்களும், மனித உரிமை அமைப்புகளும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடியின்விமர்சனம் நீதிமன்றத்தினை அவமதிப்பதாகும்; தேவையற்றதாகும். பொது நல வழக்குகள் என்பது உச்சநீதிமன்றத்தின் முக்கியஆளுகைக்கு உட்பட்டதாகும்.

    உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்ளும் பொது நலவழக்குகள் ஆழமான பரிசீலனைக்கு பின்னர்தான்எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அவை நியாயமான காரணங்களுக்காக மட்டும்தான் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே யாருடைய புரிதலின் அடிப்படையிலும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிபதிகள் தவறாக வழிநடத்தப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

    இவ்வாறு ராஜீவ் தவான் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து மனித உரிமை வழக்கறிஞர் விருந்தா குரோவர், அனைத்து நீதிபதிகள் அமர்ந்திருக்கும்போது அவர்கள் பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் யாருடைய கருத்தையோ அடிப்படையாகக் கொண்டு நீதி வழங்குவார்கள் என்று கூறுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.

    பொது மக்களின் நலன்கருதி யார் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்கலாம் என்ற நோக்கத்துடன் 1980ல் தொடங்கப்பட்டது. வழக்கு தொடுக்க முடியாதஏழைகளுக்காக சமூக செயல்பாட்டாளர்கள்வழக்கு தொடுப்பதை அவதூறு செய்வது அரசியல் சட்டத்திற்கே எதிரானதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete