ரஜனிகாந்திற்கும் நகைச்சுவை வரும் வரும் என்பதை முதன் முதலில் கொண்டு வந்த திரைப்படம் "தம்பிக்கு எந்த ஊரு?"
நேற்று ஏதோ ஒரு சேனலில் இத்திரைப்படத்தை ஒளிபரப்பினார்கள். அனேகமாக இந்த திரைப்படத்திற்குப் பிறகுதான் ரஜனிகாந்திற்கும் காமெடி சீன்கள் உருவாக்கினார்கள்.
பால் கறக்கப் போய் பசுவிடம் உதை வாங்குகிற காட்சியும் பிறகு பாம்பைக் கண்டு அஞ்சி வார்த்தை வராமல் அலறுவதும் தியேட்டரில் பலத்த கரவொலியைப் பெற்றுத் தந்த காட்சிகள். அது போலவே செந்தாமரையிடம் முதல் சம்பளம் பெறுகிற காட்சியும் பாராட்டுக்களைப் பெற்றது என்பது இன்னும் நினைவில் உள்ளது.
இப்படத்தில் சண்டைக் காட்சிகள் நன்றாக இருக்கும் என்றாலும் கதாநாயகியை காரில் கடத்திய அரை மணி நேரத்திற்குப் பின்பு தகவல் தெரிந்து கதாநாயகன் குதிரையில் சென்று மீட்கிற அற்புதம் இப்படத்திலும் உண்டு.
ஆணாதிக்க வசனங்கள் நிறைந்திருக்கும் படம் என்றாலும் இன்னும் பசுமையாக மனதில் நிற்க ரஜனியின் காமெடி நடிப்பைத் தவிர இன்னொரு முக்கியமான காரணம் என்றும் இனிமையான "காதலின் தீபம்" தான்
ரஜனிக்குள் இருந்த காமெடியனை வெளியே கொண்டு வந்த படம் தம்பிக்கு எந்த ஊராக இருக்கலாம். ஆனால் ரஜனிக்குள் இருந்த வில்லனை வெளியே கொண்டு வந்த படம் கோச்சடையான், லிங்கா ....
ReplyDelete:))
அட நீங்க வேற, அந்த ரெண்டு படமும் பாத்தவங்களை காமெடி பீஸாக்கின படங்கள்
Delete