நான்காண்டுகளுக்கு முன்பாக அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளை ஒட்டி எழுதிய பதிவின் இணைப்பு இது
அதற்கு சூனிய விகடன் என்பவர் போட்ட பின்னூட்டம் மேலே உள்ளது. அப்போதே அவருக்கு வேறு சிலர் பதில் கொடுத்திருந்தனர் என்பதையும் கவனித்திருப்பீர்கள்.
இப்போது அந்த வெறி பிடித்த கூட்டம் கையில் அதிகாரம் வந்து விட்டதால் கிறிஸ்துமஸ் தினத்தை நல்லாட்சி தினமாக மாற்றி கட்டுரைப் போட்டி நடத்துகிறது.
இப்போது புனித வெள்ளி ஈஸ்டர் தின விடுமுறை நாட்களில் நீதிபதிகள் மாநாடு வைத்து மோடி விருந்து கொடுக்கிறார். இவர் மட்டும் அமெரிக்கா போனாலும் நவராத்திரி விரதம் இருப்பாராம். அதனால் ஒபாமாவே கூப்பிட்டாலும் விருந்துக்கு போக மாட்டாராம்.
மாற்று மதத்தைச் சேர்ந்த நீதிபதிகளை வெறுப்பேற்றிப் பார்ப்பதில் இன்பம் காணும் சேடிஸ்டாகவே மோடியை பார்க்க வேண்டியுள்ளது. இதற்கு தலைமை நீதிபதியும் இசைந்திருப்பது வெட்கக் கேடு.
அடுத்து எந்த மதப் பண்டிகையை திசை திருப்பப் போகிறது மோடி அரசு?
மோடி அரசின் இந்த வன்மச் செயலைக் கண்டித்த நீதிபதி குரியன் ஜோசபிற்கு என்ன நெருக்கடிகள் வருமோ என்றுதான் கவலையாக உள்ளது.
மோடி . 9 நாட்களும் சாப்பிடாமல் நவராத்திரி விரதம் இருந்த போது, அமெரிக்க விஜயத்தை மேற்கொண்டார். போன வருட தீபாவளி அன்று சியாச்சின் பகுதியில் இராணுவ வீரர்களுடன் கழித்தார் மோடி. அதே மாதிரி நாள்கிழமை பார்க்காமல் எல்லோரையும் வேலை செய்ய எதிர்பார்க்கறாரோ என்னவோ!
ReplyDeleteமேலும் அவர் ஒபாமா அளிந்த விருந்தில் கலந்து கொண்டார், அவர் சாப்பிட்டது சுடுதண்ணீர் மட்டுமே. ஆனால் ஒபாமாவையும் மற்ற இந்திய அதிகாரிகளையும் கூச்சமின்றி சாப்பிடச்சொன்னாராம். மேலும் அந்த விருந்தில் வறுத்த மீன் பரிமாறவும் செய்தார்கள். மோடி சுத்த சைவம்.
Good reply nandavanam. For Modi India is first and not religion
ReplyDeleteபாவம் சார் நீங்கள், ரொம்பவுமே அப்பாவியாக இருக்கிறீர்கள். அவர் பதிலில் உள்ள நையாண்டியைக் கூட உண்ர முடியாத அளவிற்கு மோடிமேனியாவில் பாதிக்கப் பட்டு விட்டீர்கள்
Delete