Friday, April 3, 2015

அந்த சிலையில் பெண் இருப்பது அழகுக்காக அல்ல



மிகப்பெரும் எழுத்தாளன் மாக்சிம் கார்க்கி மிகப் பெரிய துயரங்களை  வாழ்வில் சந்தித்தவன். வீட்டிலிருந்து ஓடி வந்தவன். தான் அனுபவித்த சோகங்களை மட்டுமல்லாமல் பார்த்த காட்சிகளையும் பதிவாக்கியிருப்பான்.

ரஷ்யாவின் ஜார் ஆட்சியில் அவன் பார்த்த ஒரு காட்சி.

விவசாய நிலத்தில் குதிரைக்குப் பதிலாக ஒருவன் தன் மனைவியைப் பூட்டி வேலை வாங்கிக் கொண்டிருந்தான். மனைவிக்கு எப்படிப்பட்ட தண்டனையும் கொடுக்கலாம் என்று சட்டமே அப்போது ரஷ்ய நாட்டில் இருந்தது. அவ்வளவுதான் பெண்ணிற்கான மரியாதை.

அப்படிப்பட்ட நாட்டில் புரட்சிக்குப் பின் வைக்கப்பட்ட சிலையில் சுத்தியல் ஏந்தி ஆணும் அரிவாள் ஏந்தி பெண்ணும் இருப்பதும் சாதாரண விஷயமல்ல. சிலைக்கு அழகு சேர்ப்பதற்காக அங்கே பெண்ணை கொண்டு வரவில்லை.  ஆணும் பெண்ணும் சரிசமம் என்பதை உணர்த்துவதற்காகத்தான் அந்த சிலையில் ஆணும் பெண்ணும் இடம் பெற்றுள்ளனர். 

சோஷலிச சமுதாய அமைப்பில்தான் ஆண் பெண் சமத்துவம் என்பது நிஜமாகவே சாத்தியமானது.

- இன்று வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் மேடைக்கலைவாணர் தோழர் என்.நன்மாறன் பேசியதிலிருந்து.
 

2 comments: