கடந்த சில நாட்களாக முக நூலில் அதிகமாக நையாண்டி
செய்யப்பட்டது கல்யாண் ஜ்வல்லர்ஸ் விளம்பரம்தான். இன்று திறப்பு விழா முடிந்து
விட்டால் இனி மிகப் பெரிய விடுதலை என்றும் பலர் எதிர்பார்க்கிறார்கள்.
அப்படிப்பட்ட அதிசயம் எதுவும் நடக்கப் போவதில்லை. அமிதாப் பச்சனும் பிரபுவும் வேறு
கெட்டப்களில் வந்து நாளை முதல் மிரட்டத்தான் போகிறார்கள்.
நான் சொல்ல வந்தது வேறு விஷயம்.
இன்று காலை ஜி.ஆர்.டி நகைக்கடையின் விளம்பரத்தை
நாளிதழில் பார்த்தேன். அட்சய திரிதியை சிறப்பு விற்பனைக்கான விளம்பரம் அது. வழக்கமான செய்கூலி, சேதாரம், இலவசம், அன்பளிப்பு
இவையெல்லாம் தவிர இன்னொரு விஷயத்தையும் அதில் சொல்லி இருந்தார்கள்.
“அட்சய திருதியை அன்று வாங்கும் ஒவ்வொரு நகையும்
புரோகிதர் மூலமாக பூஜை செய்து தரப்படும்”
இதுதான் அந்த சிறப்பு சேவை.
இதில் மயங்கி எத்தனை பேர் அன்று ஜி.ஆர்.டி யில் நகை
வாங்கப் போகிறார்களோ? மற்ற மதத்தவர்கள் கேட்டால் அதற்கேற்ற ஏற்பாடும் கூட செய்து
தருவார்கள் போல.
வணிகம் நடக்க வேண்டும் என்பதற்காக என்னவெல்லாம்
செய்கிறார்கள் பாருங்கள்!
//கடந்த சில நாட்களாக முக நூலில் அதிகமாக நையாண்டி செய்யப்பட்டது கல்யாண் ஜ்வல்லர்ஸ் விளம்பரம்தான். //
ReplyDeleteஜ்வல்லர்ஸ் விளம்பரத்தை தாராளமா நையாண்டி செய்யட்டுமே!!!ஆனால் பல முற்போக்கானவை முக நூலில் தமிழர்களால் மிக அதிகமாக நையாண்டி செய்படுகிறதாமே ):