வைரமுத்து மிகப் பெரிய விளம்பர மோகம் கொண்டவரென்பது உலகம் அறிந்த உண்மை.
இந்த வார குமுதம் இதழில் வெளியான இந்த செய்தி இது.
இது மிகப் பெரிய டுபாக்கூர் வேலை என்பது திரு ஜெயகாந்தன் அவர்களின் மகள் திருமதி தீபலட்சுமி அவர்களின் பதிவு அம்பலப் படுத்திவிட்ட்து.
அந்த பதிவு
கீழே உள்ளது.
-------------------------------------------------------------------------
சில
நேரங்களில் மௌனம் குற்றமாகிவிடும் என்பதாலேயே இதை எழுத நேரிடுகிறது:
இந்த வாரக் குமுதத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களின் சிறுகதைகளைப் பாராட்டி எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதியதாக ஒரு கடிதத்தைப் பிரசுரித்து, அவரது கடைசி எழுத்து என ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்பா கடந்த
பல மாதங்களாகவே எதையும் படிக்கவோ எழுதவோ இயலாத நிலையில் தான் இருந்து
வந்தார் என்பது அவரை வந்து பார்த்த எல்லாருக்கும் தெரியும்.
அன்புடன்
வாஞ்சையாக யார் வந்து பேசினாலும் குழந்தை போல் கையைப்பிடித்துக் கொண்டு
பேசும், அவர்கள் எது
சொன்னாலும் மறுத்துப் பேசவோ, கருத்து தெரிவிக்கவோ கூட இயலாத நிலையில் இருந்தார் என்பதை
வலியுடன் இங்கு வெளிப்படுத்த நேர்வதற்கு வருந்துகிறேன்.
ஒரு
வாழ்த்தை அவரே எழுதியது போல் எழுதி வந்து, வாசித்துக்காட்டி, அதில் கையெழுத்திடுமாறு கேட்டு, கையெழுத்து கூடச் சரியாகப் போடவராத நிலையில்,
'உங்கள் பழைய கையொப்பத்தைப் பயன்படுத்திக்
கொள்ளலாமா' என்று
அனுமதியையும் கேட்டுப் பெற்றபின், அதை அப்படியே சொல்லி இருக்கலாமே!
அவரை நன்கறிந்தவர்களுக்குத் தெரியும் அதுவே பெரிய விஷயம் தான் என்று!
அப்படி
இருக்க, அவர் அந்தக்
கதைகளைத் தொடர்ந்து படித்தார் என்பதும், அவரே கைப்பட வாழ்த்து எழுதி அனுப்பினார் என்பதும்,
அந்த வாழ்த்துக் கடிதத்தை அவரது
கடைசி எழுத்து என்று ஆவணப்படுத்தலாம் என்பதும் அவரையும் அவர் எழுத்தையும்
உயிராய் நேசிக்கும் எவருக்கும் நியாயமாகாது.
------------------------------------------------------------------------------------------------------------------------
வைரமுத்துவிற்கு
ஞான பீடம் விருதை விட இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறுவதுதான் முக்கியம் என்று
யாரோ (சாரு நிவேதிதா என்று நினைவு) எழுதியதை படித்த்தாக நினைவு.
இவ்வளவு
மார்க்கெட்டிங் ஸ்கில் உள்ள வைரமுத்துவிற்கு நோபல் பரிசு ஒரு பெரிய விஷயமா என்ன?
கண்டிப்பாக
நோபல் பரிசை அவர் வாங்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
இது கூட்டுச் சகவாசத்தால் வந்தது. கல்லிஜர்- செத்தவங்கள் எல்லோருமே இதை என்னிடம் சொன்னார்கள். அதை என்னிடம் சொன்னார்கள்- என டூப் விடுவாரே அப்படியே!
ReplyDeleteமண்டு ..........மண்டு...........டைமண்டு................
ReplyDeleteDid you receive my mail?
இப்படியெல்லாமா நடந்து கொள்வது
ReplyDeleteவேதனை
சரியான கிண்டல் தோழரே! நல்ல கவிஞர்தான். ஆனால், தன் படைப்புகள் மேல் நம்பிக்கையில்லாதவராக இப்படிச் செய்துகொள்வது இவரது படைப்புகளையே பாதிக்கிறது. ஆனால், Aim the Star Shoot The Tree மாதிரி இவர் எடுக்கும் முயற்சியில் நோபல் பரிசு இல்லாவிட்டாலும் குறைந்தபட்சம் ஞானபீடத்தையாவது தட்டாமல் விடமாட்டார் போல!
ReplyDeleteRead an explanation by a friend of Vairamuthu. Poor Scape goat
ReplyDelete