சேவல் கூவி அங்கே
பொழுது விடிந்ததில்லை.
தோட்டாக்களின் ஓசையில்தான்
துயில் கலையும்.
போர் விமானங்கள் ஆக்கிரமிக்கும்
ஆகாயத்தில் கழுகுகள்
கூட பறப்பதில்லை.
மரணம் குறித்த அச்சம்
மழலைகள் மனதிலும்
விதைக்கப்பட்ட தேசத்தில்
புகைப்படக் கருவி கூட
போர்க்கருவியாய் தோன்றிட
படமெடுக்க வந்தவனை
படையெடுக்க வந்தவனாய்
பார்த்து பதைபதைத்து
கண்களில் தேக்கிய நீரோடு
சிரியா தேசத்து
சின்னஞ்சிறு ரோஜா
கைகள் உயர்த்தி
சரணடையும் சோகம் இங்கே.
அழிக்கும் போர்வெறிக்கு
அழிவு எந்நாளோ?
பின் குறிப்பு : ஒரு புகைப்படக்காரர் சிரியா
நாட்டின் இக்குழந்தையை புகைப்படம் எடுக்க தன் கேமராவை எடுத்த போது அதை ஏதோ ஒரு
ஆயுதம் எனக் கருதி சரணடைவதற்காக தன் இரு கைகளையும் உயர்த்துகிறது..
அருமையான வரிகள்.
ReplyDeleteகுறிப்பு வேதனையைக் கொடுத்தது நண்பரே...
நேரமிருப்பின் எமது குடிலுக்கும் வருகை தரவும் நன்றி நண்பரே...
அன்புடன் - கில்லர்ஜி
Beautiful Cities Syria and Yemen, now all destroyed completely, like the kids are in no man land.
ReplyDeleteEntire middle east in painful life now. because of neighboring countries , other countries also suffer because of kios theory.
Seshan,Dubai
Kids are the worst suffering people in the war. We need to think about stopping war in the earth!
ReplyDeleteசிரியா தேசத்து சின்னஞ்சிறு ரோஜா கைகள் உயர்த்திய சோகத்திற்கு மத அமைப்பின் தங்களது மத ராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்ற போர் வெறி தான் காரணம். அடுத்த கட்ட ஈழபோர் வெடிக்கும் என வைகோவும்,வீரம் பொருந்திய, மானம் பொருந்திய தமிழர்களும் உறுமவில்லையா! சிரியா என்றால் என்ன ஸ்ரீலங்கா என்றால் என்ன போர் என்றால் அழிவே.
ReplyDeleteகண்ணீரோடு குழந்தை !.....பார்க்கவே வேதனையாக இருக்கிறது. எதற்கு இந்த போர்வெறி ! - chudachuda.com
ReplyDelete