Thursday, April 2, 2015

அவங்களுக்கு சிக்கன், நமக்கு ???

சென்ற மாத அவள் கிச்சன் இதழில் பஞ்சாபி சிக்கன் கறி என்ற இணை உணவு தயாரிப்பது எப்படி என்று போட்டிருந்தார்கள்.

அதையே நான் எனது பாணியில் வழக்கம் போல காலி ப்ளவர் கொண்டு மாற்றியதை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

முதலில் செய்ய வேண்டிய சில வேலைகள்

கொஞ்சம் முந்திரி பருப்புக்களை சுடு நீரில் ஊற வைத்து தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

அரை மூடி தேங்காய் துருவலையும் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

காலி ப்ளவரையும் சுடு நீரில் உப்பு போட்டு ஊற வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஓகே ரெடியா ?

இப்போ அடுப்பில் வாணலியை வைத்து கொஞ்சம் தாராளமாய் எண்ணெய் ஊற்றி அதில் இரண்டு துண்டு பட்டை, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை வதக்கவும். பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கவும். பிறகு அதில் அந்த முந்திரி பேஸ்டையும் சேர்க்கவும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். அடுத்து சேர்க்க வேண்டியது அரைத்து வைத்த தேங்காய், அதோடு ஒரு அரை கப் தயிர். இந்த இடத்தில் கொஞ்சம் மிளகாய் பொடியையும் உப்பையும் சேர்த்து விடவும்.

இவை நன்றாக கலந்து கொதிக்கும் வேளையில் ஏற்கனவே தயாராக உள்ள காலி ப்ளவரையும் சேர்த்து ஒரு பத்து நிமிடங்கள் கொதிக்க விட்டு எடுத்து விடவும். கொத்தமல்லி தழைகள் சேர்த்து பறிமாறவும். 


ஆக பஞ்சாபி கோபி கறி தயார்.

இது வெறும் இணை உணவுதான். 


என் மனைவி தயார் செய்த முக்கியமான உணவாகிய பட்டாணி புலவு இல்லாவிட்டால் இந்த இணை உணவுக்கேது மரியாதை.

ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது வாழ்க்கைக்கு மட்டுமல்ல, உணவிற்கும் முக்கியம்தானே!

பின் குறிப்பு : இன்னும் சில பஞ்சாபி அசைவ உணவு வகைகள் அதே புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நாளைக்கும் கூட அலுவலகத்திற்கு விடுமுறைதான்.

1 comment:

  1. நல்லதொரு பயனனுள்ள பதிவு.

    ReplyDelete