Friday, April 10, 2015

பசித்த குதிரை, குருவிக்கு என்ன மிச்சம் வைக்கும்?





Trickle Down Theory  என்பது உலகமயமாக்கல் கொள்கைகளில் ஒரு கோட்பாடு. மெலே உச்சாணிக் கொம்பில் இருப்பவர்களுக்கு அரசு அள்ளிக் கொடுத்தால் அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக, சொட்டு சொட்டாக கீழே இறங்கி கடைசி படிக்கட்டில் இருப்பவர்களுக்கும் ஏதாவது பலன் கிடைக்குமாம்.

இந்த கோட்பாட்டை ஜான் கென்னத் கைப்ராயித் என்ற பொருளாதார அறிஞர் “குதிரை குருவி முறை” என்று விமர்சிக்கிறார். “குதிரைக்கு தாராளமாக ஓட்ஸ் தானியத்தை உணவாக வைத்தால் அது அசை போடும் போது சிந்துகிற தானியங்கள் சாலையில் சிதறி குருவிகளுக்கு உணவாகும்”  என்பது போல இருக்கிறது என்று அவர் நக்கலடிக்கிறார்.

இந்திய நிலைமைக்கு இந்த “குதிரை குருவி முறை” கூட பொருந்தாது என்பதுதான் யதார்த்தம்.

எவ்வளவு சலுகைகள் கொடுத்தாலும் போதாது என்ற நிலையில்தான் உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. அந்த கொழுத்த குதிரைகளின் அகோர லாபப் பசிக்கு மோடி அரசு தொடர்ந்து தீனி போட்டுக் கொண்டே இருக்கிறது. எல்லாமும் தங்களுக்கே வேண்டுமென்று கருதுகிற கார்ப்பரேட்டுகள் ஏழை மக்களுக்கு என்ன மிச்சம் வைப்பார்கள்?

மாறாக குருவிகளுக்கு எப்போதாவது கிடைக்கிற ஒரிரு தானியங்களைக் கூட  பறித்து தானே தின்னுகிற திருட்டுக் குதிரைகளாகத்தான் இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளது என்பதுதான் யதார்த்தம்.

குருவியை அடித்து குருமா செய்து குதிரைக்கு வைக்கிற வேலையும் நடக்கிறது. 

அதைச் செய்வதற்காக ஒரு அரசாங்கம் உள்ளது. அந்த அரசிற்கு தலைமை வகிக்க ஒரு பிரதமர். அவரை மரியாதையோடு பேசுங்கள் என்று சொல்ல ஒரு கூட்டம்.

என்ன கொடுமை சார் இது?
 




No comments:

Post a Comment