ஆம், முதல் முறையாக மோடியின் அமைச்சர் ஒருவருக்கு எனது பாராட்டுக்களை பதிவு செய்கிறேன்.
கோவாவில் உள்ள ஒரு துணிக்கடைக்குச் சென்ற மத்திய மனிதவளத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிர்தி இராணி, அங்கே உடை மாற்றும் அறைக்கு வெளியே பொறுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவின் கோணம் உடை மாற்றும் அறையினை நோக்கியே அமைந்திருப்பதைக் கண்டுபிடித்து காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான இந்த இழி செயலை அம்பலப்படுத்த நேரடியாக செயல்பட்டதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
பின் குறிப்பு : இதிலே எந்த அரசியலும் கலந்திருக்காது என்ற நம்பிக்கையில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளேன்.
ஏழு நாடுகளில் எழுபத்தி ஐந்து நகரங்களில் நூற்றி எண்பத்தி ஏழு கிளைகள் கொண்ட பெரிய நிறுவனம் என்று அந்த நிறுவனத்தின் இணையதளம் விளம்பரம் செய்கிறது. ஆகவே பிரச்சினையை மூடி மறைக்க நிச்சயம் முயற்சி செய்யும். அதற்கு அமைச்சர் அடிபணிய மாட்டார் என்றும் நம்புகிறேன்.
பாராட்டுவோம்
ReplyDelete