தோழர் பி.சுந்தரய்யா, தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், தோழர் பிரகாஷ் காரத் ஆகியோரைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுள்ள தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
அறிவார்ந்த தலைமை தொடரும் பாரம்பரியம் மார்க்சிஸ்ட் கட்சிக்கே உரியது என்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்,
அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ்மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கடலூரில் வெற்றிகரமாக செய்து கொண்டிருந்த வழக்கறிஞர் பணியை விட்டுவிட்டு கட்சியின் முழு நேர ஊழியராக செயலாற்ற வந்த தோழர் ஜி.ஆர் இன்று அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகியுள்ளது உண்மையான உழைப்பிற்கும் தியாகத்திற்குமான அங்கீகாரமாகும்.
இவர்கள் யாவரும் (கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள 2-3-4ம் கட்டத் தலைவர்கள் வரை) நேர்மையாகவும் ஊழல் செய்யாதவர்களாகவும், தியாகம் (செய்த பணம் தரும் வேலையை விட்டு விட்டு கட்சிப் பணி செய்வது) செய்தவர்களாகவும் இருந்தும் ஏன் மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுக்க மறுக்கிறார்கள்? அரசியல் முடிவுகளில் ஓரிரு தவறு இருக்கலாம்..ஆனால் மக்கள் பணத்தைக் களவாடியவர்கள் என்று ஒருவரையும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதே. இனித் தலைவர்களையும் கட்சிகளையும் குறை சொல்வதை விட்டு விட்டு, மக்கள் தங்களைத் தாங்களே மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
ReplyDeleteஎனது வாழ்த்துக்களும் நண்பரே
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஜாதியை மறுத்து செயல்படுகிறவர்களை ஜாதியக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் உங்கள் தலைமையில் கண்டிப்பாக புரட்சி வரும்.
DeleteThis comment has been removed by a blog administrator.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteபார்ப்பனியத்தை அம்பலப்படுத்துவதில் ஒரு பொழுதும் பின் வாங்க மாட்டோம் -எழில்
ReplyDeleteநல்லா பண்ணுங்க. ஆனா பார்ப்பனியத்திற்கு எதிராக செயல்படுபவர்களைத்தான் உங்களால் திட்ட முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக விஷம் கக்கும் நீங்கள் என்றைக்காவது மோடி பற்றியோ, ஆர்.எஸ்.எஸ் பற்றியோ வாய் திறந்ததுண்டா? அவர்களுக்கு எதிராக நான் எழுதியுள்ள எந்த பதிவிற்கும் பின்னூட்டம் இடாத நீங்கள் சி.பி.எம் தலைவர்களை மட்டும் ஜாதியக் கண்ணோட்டத்தில் அணுகுவது உங்களின் ஜாதி வெறியைக் காண்பிக்கிறது. காவிக்கூட்டத்தின் எடுபிடியா நீங்கள்?
Delete