Monday, April 6, 2015

தாய்க்கு கொள்ளி வைத்த மகள் கொலை




இந்த அராஜகம் நிகழ்ந்தது சட்டிஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹ்டா என்ற கிராமத்தில்.

சூர்ஜூபாய் என்ற 85 வயது மூதாட்டியை மகன் சந்தோஷ் இரண்டு வருடங்கள் முன்பே வீட்டை விட்டு விரட்டி விட்டான். அந்த மூதாட்டிக்கு அடைக்கலம் கொடுத்த மகள் கீதா ப்ரஹலாத்தே தான் இறந்த பின்பு தனக்கு இறுதிக்கடன் செய்ய வேண்டும் என்பது அந்த மூதாட்டியின் விருப்பம்.

அது போலவே சூர்ஜுபாய் இறந்ததும் அவருக்கு கொள்ளி வைக்கிறார் கீதா ப்ரஹலாத். அதனால் கடுப்பாகிற சந்தோஷும் அவன் மகன் பியூஷும்  கீதாவை கொன்று விடுகிறார்கள்.

என்ன ஒரு கொடுமையான செயல் இது?

தன் பொறுப்பை நிறைவேற்ற முன்வராத சந்தோஷிற்கு கொள்ளி வைக்கும் உரிமை மட்டும் எங்கிருந்து வருகிறது?

இன்று உலகமே அப்படித்தான் சென்று கொண்டிருக்கிறது.

பொறுப்பை தட்டிக் கழிப்பவர்கள் பொறுப்பை நிறைவேற்றுபவர்கள் மீது காழ்ப்புணர்வு கொள்வதும் தங்களுக்குள்ள உரிமை மற்றவர்களுக்குக் கிடையாது என்று நினைப்பதும் எவ்வளவு மோசமான குணாம்சம்!

இதிலே கீதா ப்ரஹலாத் அந்த கிராமத்து தலைவராக சமீபத்தில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெண்கள் ஓரடி முன்னே நகர்ந்தால் ஈரடி பின்னே இழுக்கத்தான் எத்தனை சதிகள் நடக்கிறது! அவற்றில் இதுவும் ஒன்று. 

 

1 comment: