Saturday, April 18, 2015

ராஜாவின் ஓயாத இசையலைகள்


 http://media.dinamani.com/2013/12/24/ilayaraja.jpg/article1962809.ece/alternates/w460/ilayaraja.jpg
 



இன்று மதிய உனவு சாப்பிடும்போது சேனல்களை மாற்றிக் கொண்டு வந்த போது பாலிமர் சேனலில் "அலைகள் ஓய்வதில்லை". இசைஞானியின் இசை உச்சத்தில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றல்லவா!

பாடல்கள் எல்லாமே ஹிட்டானது என்பதை சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. அது வரலாறு. பின்னணியிலும் அசத்தியிருப்பார். ராதா கார்த்திக்கை உதாசீனம் செய்து விட்டுப் போகும் ராஜாவின் குரலே நமக்கு சோகத்தை எடுத்துச் சொல்லும்.

அதுவே இருவரும் இணைகிற இந்த காட்சியிலோ  நமது மனமும் மகிழ்ச்சியில் திளைக்கும். வயலினை ராஜா போல இவ்வளவு சிறப்பாக திரை இசைக்கு கையாண்டவர்கள் எவரேனும் உண்டா?

அப்படியே கொஞ்சம் யுட்யூபில் தேடினால் படத்தின் டைட்டில் இசையோடு இன்னும் சில  இசைக் கோர்ப்புக்களும் கிடைத்தது. இதையும் அவசியம் கேளுங்கள்.

இவ்வளவு தூரம் எழுதி விட்டு ஒரு பாடலின்  இணைப்பைக் கூட கொடுக்காவிட்டால் என் மீது கோபப் படுவீர்கள்தானே?

இளையராஜாவின் மிகச் சிறந்த பாடல்கள் என்று யார் பட்டியலிட்டாலும் ஆயிரம் தாமரை மொட்டுக்கள்   இல்லாமல் ஒரு பட்டியல் தயாரித்திட முடியுமா?

இளையராஜாவின் இசையலைகள் நம் நெஞ்சில் என்றும் ஓயாது. இதயத் துடிப்போடு இணைந்தது.

6 comments:

  1. அருமையான பாடல்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடல் தேனி மாவட்டத்தில் ஒரு கோவில் திருவிழாவில் பெண்கள் பாடும் பாடல். அதே மெட்டை அப்படியே இரா பயன்படுத்திக் கொண்டார்.

    ReplyDelete
    Replies
    1. அந்த மெட்டிற்கு அழியாப் புகழைக் கொடுத்துள்ளார் என்றும் சொல்லலாம்

      Delete
    2. Yes Kaarihan.... That's why Raaja's music is close our heart. It is my music, our music.... He had projected music of our land... And succeeded. Thanks to Raaja sir..

      Delete
  3. இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் என்றும் இனியவை.

    ReplyDelete
  4. //இவ்வளவு தூரம் எழுதி விட்டு ஒரு பாடலின் இணைப்பைக் கூட கொடுக்காவிட்டால் என் மீது கோபப் படுவீர்கள்தானே?//
    விளக்கம் இல்லாமல் இருந்திருக்கும் எனக்கு. பாடல்கள் இணைப்பை தந்ததிற்கு நன்றி.

    ReplyDelete