Wednesday, April 8, 2015

மோடி அபிமான Fake Id யின் அபத்த விளக்கங்களுக்கு பதில்




டாருடா என்ற பெயருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு மோடி அபிமானி, மோடியை ஏன் மதிக்க வேண்டும் என்று பல பெரிய விளக்கங்கள் கொடுத்துள்ளார். பாஜக வகையறாக்களின் அதே அபத்தங்களைத்தான் அவர் சொல்லியுள்ளார்.

நல்ல மனநல மருத்துவரிடம் உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் உள்ள அவரின் மோடி போதையை தெளிய வைக்க அவருக்கு சில பதில்கள்.

Mr. Raman,

You are lucky to be India under Modi rule. Other if you live somewhere like even US, you might have been arrested for disrespecting head of state.
பாவம், தனது அறியாமையை இப்படி பட்டவர்த்தனமாக வெளிச்சம் போட்டு காட்டியிருக்க வேண்டாம். மோனிகா லெவின்ஸ்கி விஷயத்தில் பில் கிளிண்டனை அமெரிக்க மக்கள் கழுவி கழுவி ஊற்றியதையோ, ஆப்கான் படையெடுப்பில் ஜார்ஜ் புஷ்ஷை வசை பாடியதையோ வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்கு பாரக் ஒபாமாவை இப்போது திட்டிக் கொண்டிருப்பதையோ அவர் அறிய மாட்டார் போல.

சொல்லப் போனால் எப்போது வேண்டுமானாலும் அரசின் தாக்குதல் பாயும் என்று தெரிந்துதான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்றும் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற தமிழ் கருத்துரிமைப் பாரம்பரியத்தில் வந்த எனக்கு கைதாவது பற்றி கவலையே இல்லை. இந்திய அரசியல் சாசனம் எனக்கு கொடுத்துள்ள உரிமை அது. மோடியின் கருணை கிடையாது என்பதை புனைப்பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் டாருடா புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் கொண்டு வந்த 66 A பிரிவு தொடர வேண்டும் என்றுதான் மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. ஆக இந்த “பெருந்தன்மை மோசடி” வசனமெல்லாம்   வேண்டாம்


Coming bCk to why you should respect him and the government, I am giving quick list of reasons which I posted on KM block also


1. Modi improved India's image 1000 times in globe. That itlself is worth another term

ஒபாமாவோடு ஒட்டி உறவாடி டீ எல்லாம் போட்டுக் கொடுத்தாலும் மற்ற மதங்களையும் மதித்து நடக்கச் சொல்லி அறிவுரை கொடுத்து விட்டுப் போனார். ஐரோப்பிய யூனியனில் பேச தலைகீழாக நின்றாலும் அனுமதி கிடைக்கவில்லை. இதுதானப்பா இவரது இமேஜ். ஒரு சிறந்த நடிகனை இந்தியா பிரதமராக பெற்றுள்ளது என்பதுதான் உலக நாடுகள் இவர் மீது கொண்டுள்ள மதிப்பீடு. ஓவரா கற்பனை செய்யாதீங்க டாருடா, உடம்புக்கு நல்லதில்லை.

2. In just few months, clean India, Jan Dan, make in India, state planning group, and many more achievements

காந்தியின் புகழை மங்க வைக்கும் முயற்சி தூய்மை இந்தியா. வாரம் இரண்டு மணி நேரம் எல்லோரும் ஈடுபட வேண்டும் என்று சொன்னவர் அக்டோபர் இரண்டிற்குப் பிறகு துடைப்பத்தை கையிலெடுக்கவில்லையே. கையில் காசில்லாதவர்களுக்கு வங்கியில் கணக்கு இருப்பதால் என்ன பலன் என்று சொல்லுங்கள் சார். மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாயை கபளீகரம் செய்தது. எஸ்.சி/எஸ்.டி துணைத்திட்டங்களுக்கு மூடுவிழா ஆகியவைதான் திட்ட ஆணையத்தை கலைத்ததன் பலன். மேக் இன் இந்தியா என்பது இந்தியாவை கொள்ளையடிப்பதற்கான சிவப்புக் கம்பள வரவேற்பு. மேக் இன் இந்தியா என்று சொல்லிக் கொண்டே அவரது நண்பர் அதானிக்கு மேக் இன் ஆஸ்திரேலியாவிற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அழகு என்ன? அதற்கு ஆறாயிரம் கோடி ரூபாய் இந்திய மக்கள் பணத்தை கடன் கொடுத்த வேகம் என்ன? புதுசா ஏதாவது சொல்லுங்க சார்!


3. Even if Gandhi rules, none can prevent some antiingumbency. Some reduction in opinion poll can be ignored

சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் “மரண பயத்தைக் காண்பிச்சுட்டாங்கடா பரமா” என்பது போல உங்களுக்கு பயம் வந்துடுச்சு போல இருக்கே. பத்து மாசம்தான் முடிஞ்சுருக்கு. அதுக்குள்ளேயே முழுசா சாயம் வெளுத்துப் போச்சு. ஆனாலும் திமிர் மட்டும் இன்னும் குறையவே இல்லயே!


4. Just like we ask Modi to think outside gujarat, tamilnadu also should think as Indian citizens and go smooth with Modi. Until that we don't need to talk BIG on this.

மோடி குஜராத்தைப் பற்றியெல்லாம் கூட நினைப்பதில்லை சார். அவர் இதயத்துடிப்பெல்லாம் கார்ப்பரேட்டுகளாக மட்டுமே. குஜராத் வளர்ச்சி என்பது எப்படிப்பட்ட மாயை என்பதை நான் முன்பு எழுதியுள்ள குஜராத் கோயபல்ஸ் என்ற பதிவின் இணைப்பை  இங்கே அளித்துள்ளேன் . அதைப் படியுங்கள் மிஸ்டர் டாருடா.

5. A govt that has no scam or violence or inaction is very pleasant surprise for us. What else we need from it.

அடிமாட்டு விலைக்கு முதலாளிகளுக்கு நிலம் தருவதும் நிலக்கரி சுரங்கங்களை அளிப்பதற்கும் உங்கள் அகராதியில் வேறு பெயர் இருக்கிறதா? வன்முறை நடைபெறவில்லையா? டெல்லியிலும் மற்ற பகுதியிலும் சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் என்ன மலர் தூவும் விழாவா? விஷம் பரப்பும் பேச்சுக்களை அன்றாடம் மோடியின் அமைச்சர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டு மெய் மறந்து விட்டீர்களோ?

6. Minorities also understood the greatness of India culture and appreciate Modi to make them aware of their heritage

ராமரின் பிள்ளைகளா இல்லை முறை தவறிப் பிறந்தவர்களா என்று கேட்கும் மோசமான கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளதுதான் மோடியின் சாதனை. சிறுபான்மை மக்களின் உணவுப் பழக்கத்தில் கூட கைவைத்து விட்டு இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லை?


7. There is not a single bjp leader who quit against Modi. It shows his strength. Just look at aap, congress, etc

அமித் ஷா போன்ற கிரிமினல்களை தலைவராக்கினால் கேள்வி கேட்க எங்கிருந்து தைரியம் வரும்? ஹிரேன் பாண்டியா என்ற கொல்லப்பட்ட குஜராத் பாஜக அமைச்சரை நினைவில் உள்ளதா? அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை வேண்டுமானால் கேட்டு பதில் சொல்லுங்களேன்.

8. Stock market alone increased 30% and benefit retail public. That shows improvement in economy

பங்குச்சந்தைக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்டம். எப்போது வேண்டுமானாலும் சந்தைக்கு வரும், எப்போது வேண்டுமானாலும் வெளியேறும். அப்படி வெளியேறும்போது உள்நாட்டு முதலீட்டாளர்களின் பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிப் போகும். எங்கள் பொருளாதார ஆசான் தோழர் இ.எம்.ஜோசப் அவர்கள் எழுதிய கட்டுரையின் இணைப்பை    இங்கே தந்துள்ளேன். கொஞ்சம் பொருளாதார விஷயங்களை தெரிந்து கொண்டு பிறகு வாருங்கள்.

9. Farmers suicide has come down

விவசாயிகளின் தற்கொலை பற்றிய புள்ளி விபரங்கள் வருவது குறைந்திருக்கிறது. நில அபகரிப்புச் சட்டம் மூலமாக தற்கொலைகளை அதிகரிக்க மோடி ஏற்பாடு செய்துள்ளார் என்பது தெரியுமல்லவா?

10. He never takes leave and works round the clock. Have you seen similar pm?

ஆமாமாம், தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டு கடுமையாக உழைக்கிறார். நாடாளுமன்றத்திற்குக் கூட வரமுடியாத அளவிற்கு ரொம்ப பிஸி. ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, வி.பி.சிங் போன்ற பிரதமர்கள் கடுமையாக உழைத்தவர்கள். ஆனால் பாவம் தாங்கள் வேலை செய்வது போல போட்டோ எடுத்துக் கொள்ள தெரியாத அப்பாவிகள். போட்டோஷாப் பொய்கள் மூலமாக ஆட்சிக்கு வராதவர்கள். ஆகவே அவர்களுக்கு விளம்பரம் என்பது தேவைப்படவில்லை. இருபத்தி நான்கு மணி நேரமும் செல்பி எடுத்துக் கொண்டு விளம்பரம் செய்து கொள்ளதவர்கள்.

Many more are there. If I continue the list it will become bigger than your blog. So stopping here

ஆயிரம் காரணங்களை நீங்கள் அடுக்கினாலும் அதற்கு எங்களால் பதில் சொல்ல முடியும். ஏனென்றால்

மோடி ஆட்சியின் அடித்தளம் பொய்களால் கட்டமைக்கப்பட்டது. நேர்மைக்கு புறம்பானது. மோடிக்கு சப்பைக்கட்டு கட்டும் மிஸ்டர் டாருடா, நீங்களே ஒரு பொய் மனிதர்தான். உங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு பொய்யான பெயரில் உலா வருகிறீர்கள். என்னுடைய Profile ஐப் பாருங்கள். என்னைப் பற்றிய அனைத்து விபரங்களும் எனது புகைப்படத்துடன் இருக்கும்.

ஆனால் உங்கள் Profile?

உங்கள் சொந்தப் பெயரோடு மோடியை ஆதரிக்க உங்கள் மனசாட்சியே உறுத்துகிறது போல. அதனால்தான் Fake Id யில் ஒளிந்து கொண்டுள்ளீர்கள்.

இனி பின்னூட்டம் போட வருமுன் சொந்த அடையாளத்துடன் வரவும்.

இல்லையென்றால் அந்த Fake Id யை “புருடா” என்றாவது மாற்றிக் கொள்ளுங்கள்.

பொருத்தமாக இருக்கும்.

16 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. Poor Taru. Everybody is bashing him

    ReplyDelete
  3. அட விடுங்க பாசு, இவர்களை சொல்லி ஒன்றும் ஆக போவது இல்லை. தமிழகம் எப்படியோ ஆனால் இந்த பசக ஆட்சி முடியும் போது வடக்கு மக்கள் தெருவிற்கு வருவது உறுதி. அப்போதும் தமிழகத்தை பார்த்து பொறாமை கொள்வார்கள். அதிமுகவையும் திமுகவையும் முடக்கிவிட்டு வகுப்பில் படிக்கும் ஒரே மானவன் நான் தான் முதல் இடம் என்றும் சொல்லும் சிரிப்பு அரசியலில் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது பசக.

    விரைவில் அறிவார் நாம் எல்லாம் மஞ்சள் பைகாரர்கள் என்று. பொன் முட்டை இடும் வாத்தை அரிந்து முட்டை எடுக்க முனைந்தவனை போல், செலவு செய்கிறார்கள் என்றதுகாக எப்படி வேண்டும் என்றாலும் விலை ஏற்றலாம் என்று நினைகிறார்கள்.

    இப்போது வீட்டு மனைகள் மட்டும் தான் முடங்கி போய் இருக்கிறது. விரைவில் அனைத்தும் வரும். பாவம் இந்த அப்பாவி உலகமும் தெரியாமல் இந்தியாவும் தெரியாமல் என்ன காந்திய சுட்டுடாங்களான்னு கேட்போர் போலும். விடுங்க பாசு இவரை எல்லாம் .........

    ReplyDelete
  4. ராமன் சார் பாத்து எழுதுங்க.
    விமர்சனம் காமை சாரே இவங்களுக்கு பயந்து தளத்த மூடுறதா சொல்றாங்க. தாறு ஒரு க்ரூபாம். தனி ஆளு இல்லையாம்

    ReplyDelete
  5. ராமன் சார் பாத்து எழுதுங்க.
    விமர்சனம் காமை சாரே இவங்களுக்கு பயந்து தளத்த மூடுறதா சொல்றாங்க. தாறு ஒரு க்ரூபாம். தனி ஆளு இல்லையாம்

    ReplyDelete
    Replies
    1. மோடி என்றாலே மோசடிதான் போல

      Delete
  6. இவங்க தலைவர் h.raja மட்டும் லூசு இல்ல போல இருக்கு

    ReplyDelete
  7. Raman,

    Taru is exactly like a typical BJP plus ReS upper caste guy that of Ramagopalan and subramanian samy.
    In his recent visit to tamilnadu, Amit shah heavily blasted TN BJP for not working on social media to influence Tamil people. Per internal report, Tamil nadu has least number of Modi followers in Twitter.

    Taru was one of the guys with special charge in newly formed cell. They work targetting specific sites that expose Modi and hindutva

    Ayan Sen
    Independent PTI core member, TN chapter

    ReplyDelete
  8. My neighbour is a central government employee and staunch Modi supporter. But now, he is completely upset with many of Modi's anti labor policies.
    Especially after budget, he addresses modi only in third person singular.
    Please send Taru baba to advise all those their own supporters to respect modi

    ReplyDelete
  9. இது வரை மோடி ஆட்சியில் சொல்லிக்கொள்ளும் வகையில் எதையுமே சாதிக்கவில்லை..தன் பெயர் எழுதிய கோட் போட்டது, அதானிக்கு 1 billion dollar கடன் ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க.. நிலம் கையகப் படுத்தும் திட்டம் (இப்படி விவசாயிகள் எல்லோரையும் ஒழித்து விட்டால் 'விவசாயி' தற்கொலை குறைந்துவிடும்! ஏனென்றால் நிலம் போனவுடன் அவர் விவசாயி இல்லையே!) , இன்சூரன்சில் வெளிநாட்டு முதலீடு.. என்று எல்லாமே வேதனைகள் தான். சாதனை எதுவும் இல்லை!

    ReplyDelete
  10. Dear Raman,
    I greatly appreciate your effort to write a long reply against bjp propoganda. Tamil Nadu should teach a lesson for bjp leaders and fans. Keep up your strong effort to expose the false face of bjp supporters in Tamil nadu!

    ReplyDelete
  11. Taruda/Taru and some other bjp supporters are roaming freely in good Tamil blogs. Thier aim is to spread toxic opinion of bjp agenda. Tamil readers are requested to intelligently handle these kind of people with true and correct fact/information. Then, these people will automatically run away with keeping jetty in thier hands.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. Dear Sir,

    Wonderful article. This should reach everyone. If you are in Facebook kindly share the same.

    Regards,
    A Yusuf

    ReplyDelete