Monday, April 20, 2015

சேலை அணிந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்களா?



பாலியல் வன்கொடுமைக்கு ஆடையை மட்டுமே காரணமாக காண்பிக்கிற அபத்தத்தை சங் பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல பாஜகவின் கூட்டணி கட்சிகளும் நிறுத்த மாட்டார்கள் போல,

கீழேயுள்ள பத்திரிக்கைச் செய்தியை படியுங்கள்.





கோவாவில் பாஜக வின் கூட்டணிக் கட்சியாக உள்ள மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் தீபக் தாவாலிகர்தான் இதைச் சொல்லியுள்ளார்.

அவருடைய மனைவி புடவை அணிந்து கொண்டு முந்நெற்றியில் குங்குமம் வைத்திருப்பதால்தான் அவர் பாதுகாப்பாக உள்ளாராம். பாலியல் வன் கொடுமைகளே மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கம் என்பது அவரது வாதம்.

பாலியல் வன் கொடுமைகளுக்கு ஆளானவர்களில் புடவை அணிந்த பெண்கள் யாருமே கிடையாது என்று அவரால் நிரூபணம் செய்ய முடியுமா? அல்லது புடவை அணிந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்றுதான் அவரால் உறுதி செய்யத்தான் முடியுமா?

பெண்கள் மீது நடைபெறும் தாக்குதல்களுக்கு பெண்களையே காரணமாக்கும் காலாவதியான உத்தியையே இந்த அமைச்சரும் பின்பற்றியுள்ளார்.

இப்படித்தான் நிர்பயா சம்பவத்தில் அந்தப் பெண் தன்னை தாக்க வந்தவர்களின் காலில் விழுந்து சரஸ்வதி மந்திரம் சொல்லியிருக்க வேண்டும் என்ற போலிச்சாமியார் ஆசாரம் பாபுவும் பின்பு பாலியல் வன் கொடுமை செய்து இப்போது கம்பி எண்ணுகிறார்.

இந்த தீபக் தாவாலிகர் மீது எப்போது என்ன குற்றச்சாட்டு எப்போது வரப்போகிறதோ!
     
                          

9 comments:

  1. வன்கொடுமை வெறியர்களின் செயல்களை பெண்கள் ஆடையோடு தொடர்புபடுத்துவது மிகப்பெரிய அபந்தம்.

    ReplyDelete
  2. கற்பழிப்பு என்பது சூழலை பொறுத்தே நிகழ்கிறது. ஒரேவித எண்ணம் கொண்ட நான்கைந்து ஆண்கள் இருக்கும் இடத்தில் அதுவும் போதையில் இருக்கும் போது தனந்தனியாக ஒரு பெண் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான்.

    இதில் உடை எங்கு முக்கியத்துவம் பெறுகிறது என்றால், மரபணு மூலம் தான். ஜீன்ஸ் போன்ற நவீன உடை அணிந்த பெண்கள் எதற்கும் தயாரானவர்கள் என்ற எண்ணம் ஜீன்களில் இருக்கிறது. இது நமக்கு என்று இல்லை எல்லா நாடுகளிலுமே அவரவர்களின் பாரம்பரிய உடைகள் பாதுகப்பனதகவும் மற்ற நாகரிக உடைகள் செக்ஸ் சிம்ப்லாகவுமே பார்க்கப்படுகின்றன. இதை உளவியல் அடிப்படையில் கூறுகிறேன். அதனால் என்னை அந்த அமைப்புகளோடு சேர்த்துவிடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. //அவரவர்களின் பாரம்பரிய உடைகள் பாதுகப்பனதகவும் மற்ற நாகரிக உடைகள் செக்ஸ் சிம்ப்லாகவுமே பார்க்கப்படுகின்றன.//
      நண்பரே,பாரம்பரிய உடைகளை பெண்கள் வேறு எந்த உடை தெரிவில்லாமலும்,ஆண்கள் மீதான பயத்தின் காரணமாக அணிந்த பழைய காலங்களில் கற்பழிப்பு என்ற வன்கொடுமை பெண்கள் மீது நடத்தபடவில்லை என்கிறீங்க!

      Delete
    2. வன் புணர்வு என்பது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. நண்பரே, இயற்கையை பொறுத்த வரை இனபெருக்கம் என்பதுதான் அதன் அவசியம் அதற்கு ஆண் காதலோடு கூடினனா, காமத்தோடு கூடினனா என்ற பார்வை கிடையாது. இதை சற்று உளவியலோடு படித்தால் புரிந்து கொள்ள முடியும். இங்கு பிரச்சனயே இரு பாலினரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததுதான்.

      Delete
  3. எப்படி இப்படிக் கெக்கே பிக்கே என்று (5 குழந்தை பெத்துக்கோ, அந்த உணவு விற்கக்கூடாது, பெண்கள் ஜீன்ஸ் போடக்கூடாது etc) நிறைய பேர்கள் சொல்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் படித்தவர்கள் மற்றும் அரசியல்வாதிகள். அபத்தக் களஞ்சியங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை தமிழரே,
      மற்றவர்கள் கருத்தை கேட்கவே கூடாது. நான் பிடித்த முயலுக்கு மூணு கால்தான் என்ற எண்ணம் இருக்கும் வரை எது சொன்னாலும் எடுபடாது. ஆறு மனநல மருத்துவர்களின் கலந்துரையாடலை அடிப்படையாக வைத்து 'ஆண் மனசு' என்ற உளவியல் தொடரை எழுதியவன். அது முழுக்க முழுக்க ஆண், பெண் மனம் சார்ந்தவை. அதன் மூலம் பல ஆச்சர்யமான மனதின் தன்மையை அறிந்தவன் என்ற முறையில் உளவியல் ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் சாதாரணமானவர்களை விட சற்று கூடுதலாகவே சில விஷயங்கள் தெரியும். ஆனால், தங்களின் எண்ணவோட்டம் மிகவும் கீழ் நிலையில் இருப்பதால் இதைப் பற்றி மேற்கொண்டு கருத்து சொல்ல விருப்பம் இல்லை.

      Delete
  4. மனிதனது ஆதிகாலத்து ஜீன்கள் சொன்னது உலகம் தட்டையானது, அதற்கு எதிராக சிந்திப்பவங்க கெட்டவங்க, தீயவர்கள்.இப்போ பெண்களை பார்த்து இந்திய ஜீன்கள் சொல்கிறது, உத்தரவிடுகிறது சேலையை தான் நீ அணி, நவீன ஆடைகளை ஜீன்ஸ்சை புறக்கணி.
    ஆனால் ஆண்கள் தாரளமா விரும்பிய ஆடைகள் அணியலாம்.கில்லாடி ஜீன்கள்! ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதிற்காகவே இந்தியாவில் அவதரித்த ஜீன்கள்.

    ReplyDelete
  5. உலகம் முழுவதும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் பெண்கள் ஜீன்ஸ் அணிவதே என பாகிஸ்தானின் ஜாமியத் உலமா இ இஸ்லாமி இயக்கத்தின் தலைவர் மவுலானா பஸலூர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சங் பரிவார அமைப்புகளோடு இவர்களுக்கு உள்ள ஒற்றுமைகள்.

    ReplyDelete